விஜயகாந்திற்கு இப்படியொரு பழக்கமா? யாருக்கும் தெரியாமல் இருந்த ரகசியத்தை அவிழ்த்து விட்ட டிரைவர்

மறைந்த நடிகர் விஜயகாந்திற்கு கெட்ட பழக்கம் ஒன்று இருப்பதாக டிரைவர் பேசியது சமூக வலைத்தளங்களில் வருகின்றது. தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் கொடிக்கட்டி பறந்த நடிகர்களில் ஒருவர் தான் விஜயகாந்த். இவர் சினிமாவில் இருந்த காலத்தில் சக நடிகர்கள், அங்கு வேலை செய்தவர்கள் என அனைவருக்கும் உதவி செய்து புகழ் பெற்றவர்.

இதனை தொடர்ந்து பட வாய்ப்புகள் குறைவாக இருந்த காலத்தில் அரசியலுக்கு வந்து அதிலும் சிறந்த தலைவராக இருந்து வந்தார். இப்படி அவரின் ராட்சியம் தனியாக சென்றுக் கொண்டிருந்த நிலையில் உடல் நிலை கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் உடல் நிலை சரியாகி விட்டதாகவும், விரைவில் அவர் தொண்டர்களையும் மக்களையும் சந்திப்பார் என அவரின் மனைவி ஒரு வீடியோக்காட்சியை வெளியிட்டீருந்தார்.

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் உடல் நிலையில் ஏற்பட்ட கோளாறு காரணமாக உயிரிழந்துள்ளார். இவரின் இறுதி ஊர்வலத்தில் பிரபலங்கள், தொண்டர்கள், உறவினர்கள், தொண்டர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டார்கள். பின்னர் விஜயகாந்த் பற்றிய செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. சாவுக்கு காரணம் மது பழக்கமா?

அந்த வகையில் விஜயகாந்திற்கு மது பழக்கம் இருப்பதாக அவர் வீட்டு டிரைவர் பகிர்ந்து விடயம் சமூக வலைத்தளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கருத்து தெரிவித்த அவர்,“ விஜயகாந்துக்கு மதுப்பழக்கம் இருந்தது உண்மைதான். யாருக்குதான் அந்தப் பழக்கம் இல்லை. ஆனால் எல்லோரும் நினைப்பதுபோல் மதுவுக்கு அவர் அடிமை இல்லை. அவர் உடலை வருத்திக்கொண்டு சண்டை காட்சிகளில் நடிப்பார். அவர் போல் யாரும் நடிக்க முடியாது.

தினமும் காலை எழுந்து உடற்பயிற்சி செய்வார். என்னை அழைத்து அவரின் காலை தூக்கி எனது நெற்றியில் படும்படி நிற்பார். அப்படி பயிற்சி செய்ததால் அவரால் அவ்வளவு சிறப்பாக சண்டை காட்சியில் நடிக்க முடிந்தது. விஜயகாந்த் இல்லை என்பதை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. சொந்த அண்ணனை இழந்துவிட்டேன்” என உருக்கமாக பேசியிருந்தார்.

இந்த செய்தியை பார்த்த பலர், “ விஜயகாந்த் போல்