2022 சனி பெயர்ச்சி… இரண்டரை ஆண்டுகளுக்கு இந்த ராசியை சனி பாடாய் படுத்தப்போகிறார்! எச்சரிக்கை

சனிபகவான் கும்ப ராசியான தனது சொந்த வீட்டில் பயணம் செய்கிறார்.

இந்த சனி பெயர்ச்சியால் ஏழரைச்சனி, கண்டச்சனி, அர்த்தாஷ்டம சனி, அஷ்டம சனியால் அவதிப்படபோகும் ராசிக்காரர்கள் யார் யார் என்று பார்க்கலாம்.

அதே நேரத்தில் கோடீஸ்வர யோகம், விபரீத ராஜயோகம் பெறும் ராசிக்காரர்கள் யார் என்றும் பார்க்கலாம்.

மேஷம்

மேஷம் ராசிக்காரர்களுக்கு இது லாப சனி காலமாகும். செய்யும் தொழிலில் லாபமும், அபரிமிதமான வருமானமும் கிடைக்கும். சனிபகவான் பார்வை உங்க ராசியில் விழுவதும் கூடுதல் பலம். உங்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடி வரும்.
ரிஷபம்

சனி பகவான் ரிஷப ராசிக்கு பத்தாம் வீடான தொழில் ஸ்தானத்தில் அமர்வதால் செய்யும் ஆட்சி பெற்ற சனியால் சச யோகம் செயல்படும். சனியால் கொடுக்கும் பதவி, சொத்துக்களை யாராலும் அசைக்க முடியாது. கோடீஸ்வர யோகம் வரப்போகிறது. சனி கொடுப்பதை பத்திரமாக பாதுகாத்து தான தர்மங்கள் செய்யுங்கள்.
மிதுனம்

சனியால் கடந்த இரண்டரை ஆண்டுகாலமாக படாத பாடு பட்டிருப்பீர்கள். அஷ்டம சனி முடிந்து பாக்கிய சனி தொடங்குகிறது. சனியால் யோகங்கள் அதிகம் கிடைக்கும். ஏனெனில் இது தர்ம சனி காலம். பதவியில் உயர்வு புரமோசன் கிடைக்கும். நிறைய தான தர்மங்களை செய்யுங்கள்.
கடகம்

சனிபகவான் இதுநாள் வரை கண்டச்சனியாக இருந்து கஷ்டங்களைக் கொடுத்தார். இனி எட்டாம் வீட்டில் அஷ்டம சனியாக அமரப்போகிறார். அஷ்டம சனியால் சில அரசியல்வாதிகள் கஷ்டத்தை அனுபவிக்கப்போகிறார்கள். அதே நேரத்தில் எட்டாம் வீட்டு அதிபதி சனி எட்டில் ஆட்சி பெற்று அமர்வது விபரீத ராஜயோக காலமாகும். இந்த கால கட்டத்தில் சில பிரச்சினைகளை எதிர்கொண்டாலும் அவை உங்களுக்கு சாதகமாகவே முடியும். திடீர் பணவரவு கிடைக்கும்.
சிம்மம்

சனிபகவான் உங்க ராசிக்கு ஏழாம் வீட்டில் கண்டச்சனியாக அமரப்போகிறார். சனியால் மிகப்பெரிய சச யோகம் தேடி வரப்போகிறது. சிம்ம ராசிக்கார அரசியல்வாதிகளுக்கு புகழ், செல்வம், செல்வாக்கு அதிகரிக்கும்.
கன்னி

சனி பகவான் ஆறாம் வீட்டில் அமர்ந்து முழு ராஜயோகத்தையும் தரப்போகிறார். உங்கள் ராசி அதிபதிக்கு எதிரியாகவே இருந்தாலும் சனி ஆறாம் வீட்டு அதிபதி ஆறில் ஆட்சி பெற்று அமர்ந்து விபரீத ராஜயோகத்தை தரப்போகிறார். கன்னி ராசியில் பிறந்த அரசியல்வாதிகளுக்கு இனி இரண்டரை ஆண்டு காலம் ராஜயோக காலம் செல்வமும் செல்வாக்கும் அதிகரிக்கும்.
துலாம்

அர்தாஷ்டம சனியால் கஷ்டங்களையும் நோய்களையும் அனுபவித்த நீங்கள், விபத்துக்களை சந்தித்த உங்களுக்கு துன்பங்களில் இருந்த விடிவுகாலம் பிறக்கப் போகிறது. இந்த சனி பெயர்ச்சி பல நன்மைகளையும் யோகங்களையும் தரப்போகிறது. பணவரவு அதிகமாகவே இருக்கும். அரசியல்வாதிகளுக்கு இனி வளர்ச்சிதான். ஏற்றம் தரும் சனி பெயர்ச்சியாக அமைந்துள்ளது.
விருச்சிகம்

மறக்காமல் இதையும் படியுங்க   உங்க பெயர் இந்த எழுத்துக்களில் ஆரம்பிக்கிறதா? அப்போ ராஜ வாழ்க்கை அமையுமாம்...

சச யோகம் தேடி வரப்போகிறது. இனி உங்களுக்கு நன்மைகள் அதிகம் நடைபெறப்போகிறது. ஆசைகளை குறிக்கோள்களை சனி பகவான் நிறைவேற்றுவார். விருச்சிக ராசியில் பிறந்த அரசியல்வாதிகளுக்கு பதவிகளும் பட்டங்களும் தேடி வரப்போகிறது.
தனுசு

ஏழரை சனி உங்கள் ராசியை விட்டு விலகப்போகிறது. எதிர்பாராத சம்பவங்கள் நடைபெறப்போகிறது. உங்கள் ராசிக்கு இருந்த பிரச்சினைகள் சிக்கல்கள் நீங்கப்போகிறது. காரியங்கள் வெற்றியை கொடுக்கும். இந்த ராசிக்கார அரசியல்வாதிகளுக்கு இதுநாள் வரை நஷ்டங்களை ஏற்படுத்திய சனி இனி லாபங்களைத் தருவார்.
மகரம்

மகர ராசிக்காரர்களே ஏழரை சனியில் உங்களை பிடித்திருந்த ஜென்ம சனி விலகப்போகிறது. சனியின் கடைசி இரண்டரை ஆண்டு காலம் பாத சனியாக தொடர்வதால் கொஞ்சம் கவனம் தேவை. இரண்டரை ஆண்டு காலங்கள் கஷ்டங்களைக் கடந்து விடுவீர்கள்.

எவ்வளவோ பாத்துட்டோம் இதையும் ஒரு கை பார்த்துடுவோமே என்ற தெம்பு வந்து விடும். உங்களின் புதிய பயணங்களால் நன்மைகள் அதிகரிக்கும்.
கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இரண்டரை ஆண்டு காலம் ஜென்மசனி தொடங்குகிறது. சனி பகவான் தன்னுடைய ராசியில் ஆட்சி பெற்று அமரப்போகிறார்.

உழைப்புக்கு முக்கியத்துவம் தருவீர்கள். 30 வயதிற்கு மேற்பட்ட சிலர் தொழில் தொடங்குவீர்கள். கடல் கடந்து செல்லும் எண்ணம் வரும். தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள். அரசு தொடர்பான ஆதரவு கிடைக்கும்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி தொடங்குகிறது. சனி பகவான் ஒருவரின் ராசிக்கு 12, 1, 2 ஆம் வீடுகளில் இருப்பது ஏழரை சனி காலமாகும். முதல் இரண்டரை ஆண்டுகள் விரைய சனி.

இந்த கால கட்டத்தில் சனிபகவான் விபரீத ராஜயோகத்தையும் தருகிறார். மீன ராசியில் பிறந்த அரசியல்வாதிகளுக்கு சனிபகவானின் சஞ்சாரம் சாதகமான பலன்களைத் தரப்போகிறது என்றாலும் புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. தலைமையில் எதிர்ப்பை சம்பாதிக்க வாய்ப்பு உள்ளது வார்த்தைகளில் கவனமும் நிதானமும் தேவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *