பிக் பாஸ் வீட்டில் அர்ச்சனா மற்றும் விசித்ரா இருவருக்கும் மீண்டும் சண்டை ஆரம்பமாகியுள்ளது.
பிரபல ரிவியில் கடந்த அக்டோபர் மாதம் 1ம் தேதி ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். தற்போது 91 நாட்களை கடந்து செல்கின்றது.
இந்நிகழ்ச்சியிலிருந்து அனன்யா, பவா செல்லதுரை, விஜய் வர்மா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்ன பாரதி, மற்றும் ரெட் கார்டு கொடுக்கப்பட்டு பிரதீப், ஐஷு, கானா பாலா, ப்ராவோ, அக்ஷயா, ஜோவிகா, கூல் சுரேஷ், சரவண விக்ரம், ரவீனா, நிக்ஷன் என 16 பேர் வெளியேறியுள்ளனர்.
தற்போது 91 நாட்களை கடந்தாலும் வெற்றியாளர் யார் என்பதை இன்னும் கணிக்கவே முடியாமல் நிகழ்ச்சி சென்று கொண்டிருக்கின்றது. இந்நிலையில் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்த பணப்பெட்டியின் தொகை அதிகரித்து கொண்டே செல்கின்றது. நேற்றைய தினம் 9 லட்சமாக இருந்த பணப்பெட்டியின் தொகை இன்று 12 லட்சமாக மாறியுள்ளது.
விசித்ரா அர்ச்சனா இடையே கடும் சண்டை நிலவி வருகின்றது. இதுவரை பிக் பாஸ் டைட்டில் வின்னர் அர்ச்சனா என்று தான் வீட்டில் உள்ளவர்களும் வெளியே இருக்கும் ரசிகர்களும் நினைத்து வருகின்றனர்.
ஆனால் தற்போது விசித்ராவின் சண்டையால் அர்ச்சனா மாயா கூட்டணியில் சேர்ந்துள்ளார். இதனால் வாக்கு அடிப்படையில் கீழே இறங்குவதற்கும், ரசிகர்கள் மனதில் மாற்றத்தை ஏற்படுத்தவும் வாய்ப்பு உள்ளது. ஆதலால் இன்னும் சில தினங்களில் முடிய இருக்கும் பிக்பாஸில் டைட்டில் வின்னர் மாறுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.