உடல் ஆரோக்கியத்திற்காக நாம் பலவிதமான ஆரோக்கியமான பழக்கங்களை மேற்கொண்டு வருவோம். அதில் ஒன்று தான் காலையில் பப்பாளியை உட்கொள்வது. பப்பாளி ஆண்டு முழுவதும் விலைக் குறைவில் கிடைக்கக்கூடிய அற்புதமான பழமாக இருப்பதால், நிறைய பேர் பப்பாளியை தங்களின் அன்றாட உணவில் சேர்த்து வருவார்கள்.
என்ன தான் பப்பாளி ஆரோக்கியமான பழமாக இருந்தாலும், அந்த பப்பாளியை அளவாக சாப்பிட வேண்டும். அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால், அதுவும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால், அதன் விளைவாக மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும்.
பப்பாளியில் டயட்டரி நார்ச்சத்துக்கள் அதிகமாகவும், கலோரிகள் மற்றும் கொழுப்புக்கள் குறைவாகவும் இருப்பதால், எடையைக் குறைக்க நினைப்போருக்கு அற்புதமான பழம்.
ஆனால் பப்பாளி அனைவருக்குமே ஏற்ற பழமல்ல. சிலருக்கு பப்பாளியை ஒருசில பக்கவிளைவுகளை ஏற்படுத்தக்கூடும். இப்போது சத்துக்களை அதிகம் கொண்ட பப்பாளியை வெறும் வயிற்றில் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் எந்த மாதிரியான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்பதைக் காண்போம்