தமிழில் டாக்டர் திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை பிரியங்கா அருள் மோகன். அதன்பின், டான், எதற்கும் துணிந்தவன் போன்ற படங்களில் முன்னணி நடிகர்களோடு நடித்தார்.
தற்போது, இவர் நடிப்பில் வெளிவரவிருக்கும் “டிக் டாக்” என்ற திரைப்படத்தில் மிகவும் கவர்ச்சிகரமாக நடித்த காட்சிகள் குறித்த டிரைலர் வெளியாகி படு வைரலானது. படுக்கையறை காட்சிகளில் அவர் நடித்த காட்சிகளை பார்த்த ரசிகர்கள் பலர் வருத்தம் தெரிவித்தனர்.
20 நிமிட காட்சிகள்
மேலும், இதுகுறித்து பேசியுள்ள பிரியங்கா சினிமாவிற்கு வருவதற்கு முன்பு மாடல் தொழில் செய்து வந்த நேரத்தில் தான் இந்த படத்தில் நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்ததாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் இந்த பட குழு சமீபத்தில் பிரஸ் மீட் வைத்து, இந்த படத்தின் இயக்குனரும், ஹீரோவும் படத்தை தியேட்டரில் பார்த்த போது 20 நிமிடப் பகுதியை காணவில்லை.
குறிப்பாக அந்த 20 நிமிட காட்சிகள் பிரியங்கா மோகனின் காட்சிகள் தான் மிஸ்ஸிங் ஆகிவிட்டது. அதோடு, ஒரே நாளில் அந்த காட்சிகளை எடுத்து மீண்டும் படத்தில் இணைத்து ரிலீஸ் செய்து இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.