அர்ச்சனாவிற்கு மாயா கொடுக்கும் நெருக்கடி… பணப்பெட்டியை எடுப்பாரா அர்ச்சனா?

பிக் பாஸ் கொடுத்த டாஸ்கினால் மாயா ஒட்டுமொத்த பிக் பாஸ் வீட்டையே தலைகீழாக புரட்டிப் போட்டுள்ளார். பிரபல ரிவியில் கடந்த அக்டோபர் மாதம் 1ம் தேதி ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். தற்போது 91 நாட்களை கடந்து செல்கின்றது.

இந்நிகழ்ச்சியிலிருந்து அனன்யா, பவா செல்லதுரை, விஜய் வர்மா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்ன பாரதி, மற்றும் ரெட் கார்டு கொடுக்கப்பட்டு பிரதீப், ஐஷு, கானா பாலா, ப்ராவோ, அக்ஷயா, ஜோவிகா, கூல் சுரேஷ், சரவண விக்ரம், ரவீனா, நிக்ஷன் என 16 பேர் வெளியேறியுள்ளனர்.

தற்போது 91 நாட்களை கடந்தாலும் வெற்றியாளர் யார் என்பதை இன்னும் கணிக்கவே முடியாமல் நிகழ்ச்சி சென்று கொண்டிருக்கின்றது. இந்நிலையில் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்த பணப்பெட்டியின் தொகை அதிகரித்து வரும் நிலையில், தற்போது புதிய டாஸ்க் ஒன்றினை வைத்துள்ளனர்.

இந்த டாஸ்கினால் மாயா ஒட்டுமொத்த பிக் பாஸ் வீட்டையே தலைகீழாக மாற்றியுள்ளார். அதிலும் அர்ச்சனாவை பெட்டியை எடுப்பதற்கு நெருக்கடி கொடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *