இலங்கையை அதிரவைத்த தொடர் மர.ணங்கள்; பின்னனியில் போதகர் விசாரணையில் திடுக்.கிடும் தகவல்!

இலங்கையில் மத போதகர் ஒருவரின் பேச்சை நம்பி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒரேமாதிரியான சூழ்நிலைகளில் சந்தேகத்திற்கு இடமான முறையில் இடம்பெற்ற மரணங்கள் குறித்த விசாரணைகளை சிஐடியினரிடம் ஒப்படைத்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

அடுத்தடுத்து தற்கொலை
கடந்த சில நாட்களிற்கு முன்னர் நஞ்சூட்டப்பட்ட நிலையில் உயிரிழந்த ஆணினதும் பெண்ணினதும் உடல்களை பொலிஸார் மீட்டிருந்தனர். இவர்கள் இருவரும் ஒருமதப்பிரிவை சேர்ந்த போதகர் ஒருவரை பின்பற்றியவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த போதகர் ஹோமகமவில் தற்கொலை செய்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 21 வயது யுவதியின் உடல் யக்கலவில் உள்ள அவரது வீட்டில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை அம்பலாங்கொடையை சேர்ந்த 34 வயது நபர் அவர் தற்காலிகமாக தங்கியிருந்த மஹரமக விடுதியில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.

நாட்டின் பலபகுதிகளில் மதபோதனையில் ஈடுபட்ட ருவான் பிரசன்ன குணரட்ண தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

அவரது மரணத்தின் சிலநாட்களின் பின்னர் இவரது மனைவி கஹன்தோட்டமாலபேயில் விசம் அருந்தி தற்கொலை செய்துகொண்டார் தனது இரண்டு மகன்கள் மகளிற்கு நஞ்சூட்டிய பின்னர் இவர் தற்கொலை செய்துகொண்டார் .

அதேசமயம் 21 வயது யுவதியும் 34 வயது நபரும் இந்த மதபோதகரின் இறுதிச்சடங்கில் கலந்துகொண்டுள்ளனர். இவர்கள் அனைவரும் ஒரேவகையான விசத்தை அருந்தி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

மறக்காமல் இதையும் படியுங்க   ஈ.பி.டி.பியின் முன்னாள் எம்.பி திலீபன் பொலிஸ் நிலையத்தில்
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. ( Jaffna7news தளம் இதற்கு பொறுப்பேற்காது).
Shares