ரூ.1 கோடி கொடுத்தும் Coca-Cola விளம்பரத்தில் நடிக்க மறுத்த விஜயகாந்த்: இந்த காரணம் தான்

நடிகர் விஜயகாந்த் ரூ.1 கோடி ருபாய் கொடுத்ததும் Coca-Cola விளம்பரத்தில் நடிக்க மாட்டேன் என்று கூறி அவர்களை திருப்பி அனுப்பினார்.

மறைந்தார் விஜயகாந்த்

கடந்த செவ்வாய்கிழமை இரவு விஜயகாந்த் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்படுவதாக கூறப்பட்டது.

இந்நிலையில் இன்று காலை “விஜயகாந்த் நுரையீரல் அழற்சி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று காலை காலமானார்’’ என மருத்துவமனை சார்பில் அறிக்கை வெளியானது.

இதனையடுத்து, அவரது உடல் மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டது. அப்போது அவரது வீட்டின் முன்பு குவிந்திருந்த தொண்டர்கள் அவரது உடலை பார்த்து கதறி அழுதனர்.

இந்நிலையில், விஜயகாந்த் உடல் நாளை மாலை 4.45 மணி அளவில் தேமுதிக அலுவலகத்தில் அடக்கம் செய்யப்பட உள்ளது.

நடிகர் விஜயகாந்த் பற்றிய தகவல்கள் தற்போது பரவி வருகிறது. அதில் ஒன்று தான் தமிழக மக்களுக்கு விஜயகாந்த் செய்தது. 1998 -ம் ஆண்டு, Coca-Cola நிறுவனம் விஜயகாந்திடம் நீங்கள் எங்கள் நிறுவன விளம்பரத்தில் நடித்தால் ரூ.1 கோடி சம்பளமாக தருவோம் என்று கூறியுள்ளனர். அப்போதைய காலத்தில் ரூ.1 கோடி என்பது ரூ.30 கோடி அளவிற்கு சமம்.

அப்போது Coca-Cola நிறுவனத்திடம் நடிகர் விஜயகாந்த் ஒரே ஒரு கேள்வி கேட்டார். நான் உங்கள் நிறுவனத்தின் விளம்பரத்தில் நடித்தால் என் ரசிகர்கள் அனைவரும் என் முகத்திற்காக உங்களுடைய குளிர்பானத்தை வாங்கி அருந்துவார்கள்.

இதனால் பாதிக்கப்படுவது என் தமிழ் மக்கள் தான். ஏனெனில், உங்களுடைய குளிர்பானத்தை வாங்கி குடித்தால் தமிழ்நாட்டில் உள்ள சிறு குளிர்பான நிறுவனங்கள் பாதிக்கப்படும். எனக்கு பணம் முக்கியம் இல்லை. தமிழக மக்கள் தான் முக்கியம்.

தமிழக நிறுவனம் பாதிக்கப்படும் என்றால் நான் விளம்பர படங்களில் நடிக்கமாட்டேன் என்று கூறி Coca-Cola நிறுவனத்தினரை விஜயகாந்த் திருப்பி அனுப்பி வைத்தார்.

மறக்காமல் இதையும் படியுங்க  இவர் படத்தில் மட்டுமல்ல காதல் மன்னன்… அக்கா மற்றும் தங்கையை மனைவி ஆக்கிய நவரசநாயகன் கார்த்திக்..!!
Shares