கிராமத்து மக்களுக்கு உதவிய KPY பாலா வின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி இணையவாசிகளை கவர்ந்து தற்போது செம வைரலாக பரவி வருகிறது. எந்த வாய்ப்புகளும் நம்மை தேடி வராது,நாம் தான் வாய்ப்பை தேடி செல்ல வேண்டும் .அப்படி வாழ்க்கையை தேடி சென்னை வந்த இளைஞர் தான் பாலா.
எதாவது அங்கீகாரம் கிடைத்துவிடுமா என ஏக்கத்தில் சென்னை வந்த பாலா தனக்குள் ஆயிரம் சோகம் இருந்தாலும் பிறரை சிரிக்க வைக்கும் கருவியாக மாறினார். விஜய் டிவியில் கலக்க போவது யார் நிகழ்ச்சியில் போட்டியாளராக களம் இறங்கி அந்த நிகழ்ச்சியில் டைட்டிலயும் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் வெற்றிபெற்றுள்ளார்.இன்று பல ரசிகர்களை தனது பக்கம் வைத்துள்ளார் பாலா.
கலக்க போவது யார் நிகழ்ச்சியின் மூலம் நல்ல வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்றார்.பின்னர் அடிக்கடி நிகழ்ச்சிகளில் வந்து நகைச்சுவை செய்து கொண்டு சென்ற பாலாவுக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சி மிக பெரிய வாய்ப்பினை வழங்கியது. இந்த நிகழ்ச்சி மூலம் கோமாளியாக களம் இறங்கி குக்குகளை கலாய்த்து மக்களை சிரிக்க வைத்து நல்ல வரவேற்பினை பெற்றார்.
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பாலாவின் நகைச்சுவைக்கு ரசிகர்கள் உண்டு தற்போது இவர் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கோட்டையம்பாக்கம் கிராமத்தில் மக்கள் சுண்ணாம்பு கலந்த நீர் குடித்து சிறுநீரகம் பாதிக்கப்பட்டு இருப்பதை கேள்விப்பட்ட பாலா சொந்த செலவில் 3 லட்ச ரூபாய்க்கு குடிநீர் சுத்திகரிப்பு கருவியை வழங்கியுள்ளார்.