ஜனனி அப்பா எடுத்த அதிரடி முடிவு.. கண்ணீரில் நாயகி குடும்பம்-கதிரின் முடிவு என்ன?

எதிர்நீச்சல் ஜனனி அப்பாவின் முடிவு ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் முக்கிய சீரியல்களில் ஒன்று தான் எதிர்நீச்சல். இந்த சீரியல் ஆரம்பமான காலத்தில் இருந்து டாப் சீரியல்களில் ஒன்றாக ஓடிக் கொண்டிருக்கின்றது.

அந்த வகையில், இன்றைய தினம் வெளியாகிய ப்ரோமோவில் ஜனனி அப்பா நாச்சியப்பன் அவருடைய குடும்பத்தை பார்த்த பின்னர் அவருடைய மனைவி விட்டு குடும்பத்திற்காக மனம் மாறியுள்ளார். இதனை ஜனனியின் அம்மாவால் தாங்கிக் கொள்ள முடியாமல் அழுது புலம்புகிறார்.

உடனடியாக ஜனனி – சக்தி ஆகிய இருவரும் அவரை வெளியில் அழைத்து வருகிறார்கள். ஜனனியின் அம்மாவை எங்கு அனுப்ப வேண்டும் என தெரியாமல் ஜனனி முழிக்கிறார். இதனை கவனித்த சக்தி குணசேகரன் வீட்டிற்குள் மாமியாரை அழைத்து செல்கிறார்.

அசிங்கபட்டு நிற்கும் ஜனனி அம்மா

இந்த நிலையில் ஜான்சி ராணியின் ஆலோசனையால் விசாலாட்சி கடுப்பாகி இருக்கிறார். இதனை தொடர்ந்து ஜனனியின் அம்மாவை தொடர்ந்து விசாலாட்சி அசிங்கப்படுத்துகிறார். அம்மாவின் பேச்சால் கோபமடைந்த சக்தி, “ ஜனனியின் அம்மாவுடன் இணைந்து இவரும் வெளியேற போவதாக கத்துகிறார்.

யாருடைய சொல்லுக்கும் அடிப்பனியாத விசாலாட்சி சக்தியின் கோபத்தை பார்த்து ஒன்று பேசாமல் அமைதியாக நிற்கிறார். இப்படியாக இன்றைய நாளுக்கான ப்ரோமோ நிறைவடைந்துள்ளது. அத்துடன் ஜனனியின் அப்பாவின் இந்த முடிவு ரசிகர்களால் அதிகமாக விமர்சிக்கப்பட்டு வருகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *