இந்த உருண்டை போதும் கொ ழுப்பு கட்டி இருந்த இடம் தெரியாமல் போகும் ஒரு உருண்டை ஏகப்பட்ட நன்மைகள் !

நமது தோலில் ஏற்படும் கொழுப்புக் கட்டிகள் தொடர்பான பிரச்சனைகள் பிறவியிலோ அல்லது திடீரென்றோ ஏற்படக் கூடியது.மேலும் நமது சருமத்தின் தோலானது சுத்தமற்றதாக இருப்பது, சர்க்கரை நோயாளிகள், உணவுகளில் கட்டுப்பாடு இல்லாதவர், புகைப் பிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் போன்றவர்களுக்கு தோல், முதுகு, இடுப்பு, அக்குள், தொடை, கை மற்றும் கால் போன்ற இடங்களில் பலவித கட்டிகள் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளது.

அந்த வகையில் உருவாகும் கொழுப்புக் கட்டிகளானது, நமது தோலில் உருவாவதற்கு கிருமித் தொற்றுகளும் காரணமாக உள்ளது.பொதுவாக நமது சருமத்தில், வியர்வைக் கட்டி, கொழுப்புக் கட்டி, வெப்பக் கட்டி, புற்றுநோய் கட்டி இது போன்ற பலவகை கட்டிகள் மரபியல் மற்றும் சில பழக்க வழக்கங்கள் காரணமாக நம்மை அதிகமாக பாதிப்படையச் செய்கிறது.

கொழுப்புக் கட்டிகள் ஏற்பட என்ன காரணம்?

கொழுப்புக் கட்டிகள் என்பது நமது தோலின் உட்பகுதியில் உள்ள சிறுசிறு கொழுப்புகள் ஒன்றாக சேர்ந்து ஒரே இடத்தில் தங்குவதால் ஏற்படுகிறது.கொழுப்புக் கட்டியானது அடிபோஸ் வகை கொழுப்புகளினால் ஆனது. இதற்கு மற்றொரு பெயர் கழலை என்றும் கூறுவார்கள்.கொழுப்புக்கட்டி பிரச்சனையானது நூற்றில் உள்ள ஒருவருக்கு மட்டுமே ஏற்படுகிறது. இந்தக் கட்டியானது நமது உடம்பில் அங்கும், இங்கும் 3செ.மீ முதல் 20செ.மீ வரை வளரக் கூடியதாக உள்ளது.

நமது குடும்பத்தின் உள்ள யாருக்காவது கொழுப்புக் கட்டிகள் இருந்தால், அது அந்தக் குடும்பத்தின் பரம்பரை சேர்ந்தவர்களுக்கு பரவும் ஒரு தொற்று நோய்களாக இருக்கிறது.அறுவை சிகிச்சை செய்வதன் மூலம் தான் கொழுப்புக் கட்டிகள் எதனால் ஏற்படுகிறது என்பதை கண்டுபிடிக்க முடிகிறது. மேலும் சிலருக்கு உடம்பில் அடிபட்ட இடங்களில் கூட கொழுப்புக் கட்டிகள் ஏற்படுகிறது.

கொழுப்புக் கட்டிகளில் இரண்டு வகைகள் உள்ளது. வலி உள்ள கொழுப்புக் கட்டிகள் மற்றும் வலி இல்லாத கட்டிகள். மேலும் கொழுப்புக் கட்டிகள் ஏன் ஏற்படுகிறது என்று இதுவரை உறுதியாக கண்டுபிடிக்க முடியவில்லை. ஆயுர்வேத மருத்துவத்தில், நமது உடலின் நச்சுக்கள் அதிகரிப்பதால் தான் கொழுப்புக் கட்டிகள் ஏற்படுகிறது என்று கூறுகின்றார்கள். மேலும் இதனை தடுக்க வாமன முறை மருத்துவம் பயன்படுத்தப்படுகிறது.

Shares