குடலில் தேங்கியிருக்கும் கழிவுகளை எளிய முறையில் அகற்றுவது எப்படி?

நாம் உண்ணும் உணவில் உள்ள கழிவுகள் முழுமையாக வெளியேறினால் தான் உடல் நலம் ஆரோக்கியமாக இருக்கும். கழிவுகள் உடலில் தங்கத் தொடங்கிவிட்டால் பல்வேறு வியாதிகளை ஏற்படுத்திவிடும்.

குறிப்பாக குடலில் இருக்கும் கழிவுகள் மிகவும் ஆபத்தானது. அவை நச்சுக்களாக மாறும் தன்மை உடையது. குடலில் இருக்கும் கழிவுகளை வெளியேற்ற வெறும் வயிற்றில் இஞ்சி சாறு குடித்தால் நல்லது. காலையில் அருந்தும் டீயில் இஞ்சி சேர்த்து அருந்தி வந்தாலும் குடலில் உள்ள கழிவுகள் நீங்கும்.

அதேபோல் ஒரு டம்ளர் சூடான நீரில் எலுமிச்சம் பழத்தை பிழிந்து அதில் தேன் கலந்து குடித்தால் குடலில் உள்ளகழிவுகள் உடனடியாக வெளியேறும். அதேபோல் வெள்ளைப் பூண்டுக்கு கழிவுகளை வெளியேற்றும் தன்மை உண்டு. நமது உணவுடன் அவ்வப்போது வெள்ளைப் பூண்டுகளை சேர்த்துக்கொள்ள வேண்டும்.

இவற்றை ரெகுலராக செய்து வந்தால் குடலில் உள்ள கழிவுகள் அனைத்தும் முழுமையாக வெளியேறிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது

மறக்காமல் இதையும் படியுங்க   பூண்டு நீண்ட நாட்கள் கெட்டுப் போகாமல் இருக்கணுமா? அப்போ இப்படி வைங்க

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *