யாழ்ப்பாணத்தில் வீடொன்றில் நள்ளிரவு நடந்த பயங்கர சம்பவம்!

யாழ். புத்தூர் கிழக்கு பகுதியில் வீடொன்றின் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இந்த சம்பவம் நேற்றிரவு (30-12-2023) இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வீட்டில் இருந்தவர்கள் உறங்கிக் கொண்டிருந்த வேளை மோட்டார் சைக்கிள் வந்த இனம் தெரியாதோர் வீட்டின் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதலை நடாத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

தாக்குதலில் வீட்டின் முன்பகுதி சேதம் அடைந்துள்ளதுடன், வீட்டில் உள்ளவர்கள் வெளியே வந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்து தாக்குதலை மேற்கொண்ட நபர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Shares