திரையுலகில் களமிறங்கும் ஈழத்துக் குயில் கில்மிஷா

தென்னிந்திய பிரபல தொலைக்காட்சியான ஜீ தமிழில் ஒளிபரப்பான சரிகமப இசைநிகழ்ச்சியில் பங்கேற்று இறுதிச் சுற்றில் வெற்றி மகுடம் சூடிய ஈழத்துக் குயில் கில்மிஷாவிற்கு தென்னிந்திய திரைப்படத்தில் வாய்ப்பு கிடைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

அத்தோடு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் இசை நிகழ்ச்சியில் கலந்து கொள்வற்கான அழைப்பு கிடைத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், தனக்கு ஆதரவளித்த நாட்டு மக்களுக்கும், தென்னிந்திய மக்களுக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனக்கு வாழ்த்து தெரிவித்தமை தொடர்பில் பெருமை அடைவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், யாழ்ப்பாண மக்களின் வரவேற்பானது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியதாகவும், ஆதரவளித்த சகோதர மொழி மக்களுக்கும் நன்றியை தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார்.

இசைத்துறையில் மிகப்பெரிய பின்னணி பாடகராவதே தன்னுடைய விருப்பம் என்றும் வைத்தியராக வேண்டும் என்ற தன்னுடைய இலட்சியத்தை நோக்கியும் பயணிக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். திரையுலகில் களமிறங்கும் ஈழத்துக் குயில் கில்மிஷா

தென்னிந்திய பிரபல தொலைக்காட்சியான ஜீ தமிழில் ஒளிபரப்பான சரிகமப இசைநிகழ்ச்சியில் பங்கேற்று இறுதிச் சுற்றில் வெற்றி மகுடம் சூடிய ஈழத்துக் குயில் கில்மிஷாவிற்கு தென்னிந்திய திரைப்படத்தில் வாய்ப்பு கிடைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

அத்தோடு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் இசை நிகழ்ச்சியில் கலந்து கொள்வற்கான அழைப்பு கிடைத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், தனக்கு ஆதரவளித்த நாட்டு மக்களுக்கும், தென்னிந்திய மக்களுக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனக்கு வாழ்த்து தெரிவித்தமை தொடர்பில் பெருமை அடைவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், யாழ்ப்பாண மக்களின் வரவேற்பானது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியதாகவும், ஆதரவளித்த சகோதர மொழி மக்களுக்கும் நன்றியை தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார்.

இசைத்துறையில் மிகப்பெரிய பின்னணி பாடகராவதே தன்னுடைய விருப்பம் என்றும் வைத்தியராக வேண்டும் என்ற தன்னுடைய இலட்சியத்தை நோக்கியும் பயணிக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மறக்காமல் இதையும் படியுங்க  நடிகர் சிவ ராஜ்குமாருக்கு அமெரிக்காவில் தீவிர சிகிச்சை! எனன் ஆனது?
Shares