இந்த ஆளு கூட குடும்பம் வந்துறாதம்மா.. ரக்சிதாவை உஷார் செய்த பிரபலம் – வைரல் காணொளி

தினேஷ் குறித்து பிக்பாஸ் வீட்டில் விசித்திரா பேசிய காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி 75 நாட்களை கடந்து விறுவிறுப்பாக சென்றுக் கொண்டிருக்கின்றது.

மற்ற சீசன்கள் போல் அல்லாமல் இந்த சீசனில் நாட்கள் மளமளவென 75 நாட்களை கடந்து விட்டது. ஆனாலும் போட்டியாளர்கள் தங்களிடம் உள்ள வன்மத்தை வைத்து நாட்களை கடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

அத்துடன் அடிக்கடி போட்டியாளர்கள் ஏதாவது சர்ச்சையில் சிக்கிக் கொள்கிறார்கள். இதனால் சமூக வலைத்தளங்களில் பிக்பாஸ் அதிகமாக ட்ரோல் செய்யப்பட்டு வருகின்றது.

பிரதீப் ஆண்டனி நிகழ்ச்சியை விட்டு சென்ற பிறகு இந்நிகழ்ச்சியை ரசிகர்கள் பார்க்கமாட்டார்கள் என்று தான் பேசப்பட்டது.

தினேஷ் மீது கடுப்பான விசித்திரா
இந்த நிலையில் இன்றைய தினம் விசித்திரா பேசிய காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

அதில், “ ‘சில மூஞ்சிகளை பார்த்தால் வெறுப்பாக இருக்கிறது எவ்வளவு முயற்சி செய்தாலும் அந்த வெறுப்பு போகவே மாட்டேங்குது.

இது எல்லாம் இருந்தென்ன பிரயோஜனம் வாழ்ந்து என்ன பிரயோஜனம். இப்படிப்பட்ட ஆளுடன் எப்படி குடும்பம் நடத்துவார்கள், விட்டுட்டு ஓட வேண்டியது தான். ஒரு மூன்று மாதம் இவர்களுடன் குடித்தனம் பண்ண முடியவில்லை.

இவருடன் எல்லாம் எப்படி ஒருவர் குடித்தனம் நடத்துவார், திரும்பி கிரும்பி வந்திடாதம்மா தாயே, ஒழுங்கா வாழ்க்கையை நடத்து. இவனுடயெல்லாம் வாழ்வதற்கு நீ தனியாகவே இருந்து விடலாம்..” என கடுப்பில் பேசியுள்ளார்.

இந்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. அத்துடன், விசித்திரா ஏன் இப்படி பேசுகிறார் என தெரியாமல் ரசிகர்கள் புலம்பி வருகிறார்கள்.

மறக்காமல் இதையும் படியுங்க   பிக் பாஸ் போட்டியாளராக வரும் சீரியல் நடிகையின் கணவர்! சர்ச்சை பிரபலம் தான்
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. ( Jaffna7news தளம் இதற்கு பொறுப்பேற்காது).
Shares