விஜயகாந்த் உடலை பார்த்து கண்ணீர் சிந்திய நடிகர் விஜய்!

விஜயகாந்த் உடலை பார்த்து கண்ணீர் சிந்திய நடிகர் விஜய்!
தேமுதிக கட்சியின் நிறுவனத் தலைவரும், நடிகருமான விஜயகாந்த் உடல் நலக்குறைவால் இன்று காலமானார். இந்நிலையில் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு நடிகர் விஜய் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த நவம்பர் 18ஆம் தேதி அன்று சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். இருமல், சளி மற்றும் தொண்டை வலி பாதிப்பு அவருக்கு இருந்த நிலையில், வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காகவே விஜயகாந்த் சென்றுள்ளதாக தேமுதிக தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டு இருந்தது. அவரது உடல் நிலை சற்று தேறிய நிலையில் கடந்த டிசம்பர் மாதம் 11ஆம் தேதி விஜயகாந்த் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இந்த நிலையில் கடந்த டிசம்பர் 26ஆம் தேதி அன்று உடல் நிலை குறைவு காரணமாக மீண்டும் சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரது உயிர் இன்று காலை 6.10 மணிக்கு பிரிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு நடிகர் விஜய் இரவு 10.30 மணியளவில் வந்து நேரில் மாலை போட்டு அஞ்சலி செலுத்தினார்.

அப்போது இரண்டு நிமிடங்கள் மவுனமாக இருந்த விஜய், விஜயகாந்தின் அசைவற்ற உடலைப் பார்த்தபடியே இருந்தபோது கண்ணீர் சிந்தினார். பின், பிரேமலதா விஜயகாந்துக்கும், விஜயபிரபாகரனுக்கும், சண்முக பாண்டியனுக்கும் ஆறுதல் கூறிவிட்டு கிளம்பினார்.

முன்னதாக நடிகர் விஜயின் அண்ணன் ஆக செந்தூரப்பாண்டி படத்தில் விஜயகாந்த் நடித்திருந்தார் என்பதும், விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரின் 17 படங்களில் விஜயகாந்த் ஹீரோவாக நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மறக்காமல் இதையும் படியுங்க  ஹையோ..!!கண்ணுப்படுறப்போகுது… குழந்தையுடன் தீபாவளி அன்று அசத்திய விஜய் டிவி புகழ் மற்றும் அவரின் மனைவி…!
Shares