“மீனாட்சி பொண்ணுங்க” சீரியல் ஷூட்டிங்கில் பொங்கிய நடிகைகள்.. எல்லை மீறும் வாக்குவாதம்

“ மீனாட்சி பொண்ணுங்க” சீரியல் ஷூட்டிங் ஸ்பார்ட்டில் நடிகைகள் வாக்குவாதத்தில் ஈடுப்பட்ட வீடியோ சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
மீனாட்சி பொண்ணுங்க..

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று தான் மீனாட்சி பொண்ணுங்க. இந்த சீரியல் மற்ற சீரியல்கள் போல் அல்லாமல் கதைக்களம் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும். இதனாலேயே அதிகமான ரசிகர்கள் இருக்கிறார்கள்.

அந்த வகையில், ஆண் துணை இல்லாமல் தன்னுடைய மூன்று பெண்களையும் கௌரவமாக சம்பாதித்து வளர்த்து வருபவர் தான் மீனாட்சி. இப்படியாக நகர்ந்து கொண்டிருக்கும் சீரியலில் இருந்து பல பேர் மாற்றம் செய்து விட்டார்கள்.ஆனாலும் டிஆர்பியில் நல்ல ரேட்டிங்கில் சென்றுக் கொண்டிருக்கின்றது.

மேலும், இந்த சீரியலில் கதாநாயகனின் அம்மாவாக ரங்கநாயகி என்ற வில்லி கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருப்பவர் சசி லயா. வில்லியாக பலரின் கவனத்தை ஈர்த்த சசி லயா சோசியல் மீடியா முழுவதும் மக்கள் மத்தியில் பிரபலமானவர், சமூக ஆர்வலர், தன்னம்பிக்கை பேச்சாளர், நடிகை என பன்முகம் கொண்டவராக பார்க்கப்படுகின்றார்.

சக நடிகைக்குள் அடிதடி

இந்த நிலையில் இவர் சில திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். இவ்வளவு புகழ் பெற்ற சசி லயா மீனாட்சி பொண்ணுங்க சீரியல் நடிகைகளுடன் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

அதாவது, சக நடிகைகள் சீரியல் உடைய ஷூட்டிங் ஸ்பாட்டில் சோபா ஒன்றில் நடிகைகள் உட்கார்ந்து கொண்டிருந்தார்கள். அப்போது சீனியர் நடிகையான ஆர்த்தி உட்கார இடம் கேட்டு இருக்கிறார். அதற்கு சசிலயா தள்ளி உட்கார்ந்து இருக்கிறார்.

சீனியர் வரும்போது ஜூனியர் எழுந்து நின்று எழ வேண்டும். மரியாதை கொடுக்க வேண்டும் என்றெல்லாம் ஆர்த்தி கூற வாக்குவாதம் முற்றியுள்ளது. கோபமடைந்த ஆர்த்தி, லயாவை அடிக்கிருக்கிறார். இதனால் அங்கிருந்த மற்ற நடிகைகள் அவர்களை விலக்கி இருக்கிறார்கள்.

இப்படியாக சண்டை முற்றிய நிலையில் அங்கிருந்தவர்கள் இந்த காட்சியை காணொளியாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து விட்டனர். இதனை தொடர்ந்து சீரியல் இயக்குனர் இரு தரப்பிலும் பேசி பிரச்சினையை முடித்து வைத்திருக்கிறார். இது தொடர்பான விளக்கத்தை லயா பதிவிட்டிருக்கிறார்.

அது மட்டுமல்லாமல் தற்போது வெளியாகியிருக்கும் வீடியோவை சூட்டிங்கில் இருந்த நபர் தான் எடுத்து வெளியிட்டு இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Shares