நடிகர் சூர்யாவை காணவில்லை என்ற போஸ்டர் சமூகவலைத்தளத்தில் தீயாய் பரவி வருகின்றது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான சூர்யா – ஜோதிகா மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ள தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
ஜெய் பீம் படம் குறித்து எழுந்த சர்ச்சை தான் அதற்கு காரணம்.
ஜெய்பீம் படத்தில் வன்னியர் சமூக மக்களின் உணர்வுகளை புண்படுத்தி விட்டதாக சூர்யா மற்றும் ஜோதிகா இருவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ருத்ர வன்னியர் சேனா அமைப்பின் நிறுவன தலைவர் சந்தோஷ் நாயக்கர் புகார் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வேளச்சேரி காவல் ஆய்வாளரிடம் புகார் அளித்திருந்தார்.
ஆனால், அவர் அந்த நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. இந்நிலையில் இதனை விசாரித்த நீதிமன்றம் படத்தின் தயாரிப்பாளர்கள் சூர்யா மற்றும் ஜோதிகா, இயக்குனர், கலை இயக்குனர் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்ய வேளச்சேரி காவல் நிலையத்திற்கு உத்தரவிட்டுள்ளது.
தற்போது இந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதுமட்டுமில்லாமல் இது தொடர்பாக பாஜக கட்சியில் இருந்து பதிவு ஒன்று வெளியாகி இருக்கிறது.
சூர்யா காணவில்லை போஸ்டர்
அதில், தமிழக மக்களுக்கு எந்த பிரச்சனை வந்தாலும் உடனே லெட்டர் பேடை தூக்கிக்கொண்டு வந்து குரல் கொடுக்கும் சமூக நீதிப் போராளி அண்ணன் சூர்யாவை கடந்த ஒரு வருடமாக காணவில்லை.
ஆண் தாய் ஆட்சியில் மக்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என நினைத்து விட்டு கோமாவிற்கு போய்விட்டார் போலும்!
என்று சூர்யாவின் புகைப்படத்தை போடு காணவில்லை என்று போஸ்டர் வைத்திருக்கிறார்கள்.
தற்போது இது சோசியல் மீடியாவில் பரபரப்பை கிளப்பி வருகிறதுஇதற்கு சூர்யா மற்றும் ஜெய் பீம் படக்குழு தரப்பில் இருந்து என்ன பதில் வரப்போகிறது? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. ( Jaffna7news தளம் இதற்கு பொறுப்பேற்காது).