அண்ணே என்ன மன்னிச்சிடுங்க… கதறி அழுது விஜயகாந்த்துக்கு விஷால் இரங்கல்

விஜயகாந்த் மறைவையடுத்து நடிகர் விஷால் கண்ணீர் விட்டு கதறி அழுது இரங்கல் தெரிவித்துள்ளார். குறித்த காணொலி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

கேப்டன் விஜயகாந்த் இன்று காலை மருத்துவமனையில் இருந்து சிகிச்சை பலனின்றி காலமானார். இவரின் உடல் தேமுதிக அலுவலகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

அரசியல் பிரபலங்கள், திரையுலகினர், பொதுமக்கள் என அனைவரும் வரிசையாக விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் அமெரிக்காவில் இருக்கும் நடிகர் விஷால், வீடியோ வெளியிட்டு இரங்கல் தெரிவித்துள்ளார்.

அதில், அண்ணே.. என்னை மன்னித்துவிடுங்கள். இந்த நேரத்தில் நான் உங்கள் பக்கத்தில் இருந்து உங்கள் முகத்தை ஒருமுறை பார்த்து உங்கள் காலை தொட்டுக் கும்பிட்டிருக்க வேண்டும். நல்லது செய்வது என்பது சாதாரண விஷயம் அல்ல.

அதிலும் எங்களைப் போன்ற ஆட்கள் நல்லது செய்வது சாதாரணம் அல்ல. உங்களிடமிருந்து அதை நான் கற்றுக் கொண்டேன். உங்கள் அலுவலகத்துக்கு யாராவது வந்தால் அவர்களுக்கு சோறு போட்டு அனுப்புவீர்கள்.

மறக்காமல் இதையும் படியுங்க   பித்தலாட்டங்களுக்கு மத்தியில் நடந்த திருமணம்- வாழ்க்கை காப்பாற்ற போராடும் தங்கமயில்- மாட்டுவாரா?
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. ( Jaffna7news தளம் இதற்கு பொறுப்பேற்காது).
Shares