திருமணம் வரை சென்ற விஜயகாந்த்- ராதிகா காதல்.., பிரித்து விட்ட நண்பர்- பிரபல பத்திரிக்கையாளர்

நடிகர் விஜயகாந்த் மற்றும் நடிகை ராதிகா காதலை நண்பர் ஒருவர் பிரித்துவிட்ட சம்பவம் குறித்து பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு கூறியிருக்கிறார்.
விஜயகாந்த்- ராதிகா காதல்

இனிக்கும் இளமை படத்தில் முதன் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர், விஜயகாந்த். அதனைத்தொடர்ந்து வைதேகி காத்திருந்தாள் படத்தில் கதாநாயகனாக நடித்தார்.

அந்த காலத்தில் விஜயகாந்திற்கு சரியான கதாநாயகி யார் என்றால் ராதிகாவை தான் சொல்வார்கள். இவர்கள் இருவரும் இனைந்து ஒரு படத்தில் நடித்தாலே அது கண்டிப்பாக வெற்றி படமாகத்தான் இருக்கும்.

இவர்களின் உறவு, நட்பை தாண்டி காதலாக மாறி திருமணம் வரை சென்று இருக்கிறது. திருமணத்திற்கு புடவை முதற்கொண்டு ராதிகா எடுத்து வைத்திருந்து இருக்கிறார். ஆனால் திடீரென அந்த திருமணம் நடக்காமல் போனது.

இச்சம்பவம் தொடர்பாக பிரபல பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு பேட்டியளித்துள்ளார்.
அவர் கூறியதாவது…

அவர், “விஜயகாந்த் சம்மந்தமாக நிறைய கிசுகிசுகள் உள்ளது, ஆனால் அவர் அவற்றையெல்லாம் கண்டு கொள்வது இல்லை.

விஜயகாந்த் மற்றும் ராதிகாவை பிரித்தது இப்ராஹிம் ராவுத்தர் தான். அவர் வேண்டாம் என்று சொல்லிவிட்டார். இருவரும் விரும்பியது அனைவருக்கும் தெரியும். இருவரும் சினிமாவில் இருப்பதால் வேண்டாம் என நினைத்துவிட்டார்.

இப்ராஹிம் ராவுத்தருக்கு, விஜயகாந்தை முதலமைச்சராக மாற்ற வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. ராவுத்தர் தான் விஜயகாந்தை வடிவமைத்தார்.ராதிகா வந்தால் அனைத்தும் மாறிவிடும் என நினைத்து வேண்டாம் என சொல்லி இருக்கிறார்.

இதனால் ராதிகா மிகுந்த மன உளைச்சளுக்கு ஆளானார். ஆனால் பிரமேலாதா வந்தவுடன், ராவுத்தரையே தூக்கி வெளியே அனுப்பிவிட்டார் ” என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *