திருமண வரவேற்பில் மணமக்களுக்கு நண்பர்கள் கொடுத்த பரிசைப் பாருங்க.. வெட்கத்தில் முகம் சிவந்த மணப்பெண்..!

திருமணம் என்பது ஆயிரங்காலத்துப் பயிர் என்பார்கள். திருமணம் வாழ்வில் ஒருமுறையே நடக்கக் கூடிய மகிழ்ச்சியான வைபோகம். அதனால் தான் அந்த பசுமையான நினைவுகளை போட்டோ, வீடீயோவாக எடுத்து நினைவுகளாக நெஞ்சோடு தக்கவைத்துக் கொள்கின்றனர். ஆனால் இப்படிப்பட்ட திருமணத்தில், மணமேடையில் மாப்பிள்ளையின் நண்பர்கள் ஒரு கிப்ட் கொடுக்க, மணப்பெண் விழுந்து, விழுந்து சிரிக்கிறார்.

பொதுவாகவே திருமண வீடு என்றாலே கலகலப்புக்குப் பஞ்சம் இருக்காது. அதிலும் மணமக்களின் நண்பர்களுக்கு இது மிகவும் கொண்டாட்டமான நிகழ்வுதான். இங்கேயும் அப்படித்தான். ஒரு நண்பரின் திருமணத்திற்கு மொத்த பிரண்ட்ஸ் கூட்டமும் லீவு எடுத்துவிட்டு வந்தது. திடீரென கும்பலாக மேடைக்கு ஏறியவர்கள் வரிசையாக கிப்ட் கொடுத்தனர். இதில் மணமகள் சிரிப்போ வேற லெவல்.

அப்படி என்ன கிப்ட் கொடுத்தார்கள் என்கிறீர்களா? வரிசையாக வந்த நண்பர்கள் குழந்தைகளுக்கான பொம்மை, விளையாட்டு சாமான்கள், பீடிங் பாட்டில், பந்து, பலூன், கிலுக்கு என பரிசாகக் கொடுக்கின்றனர். வழக்கமாக கல்யாண நாளுக்கு மணமக்களுக்கு அவர்களுக்குத் தேவையானவற்றைத்தான் பரிசாகக் கொடுப்பார்கள். ஆனால் இங்கே வேற லெவலில் யோசித்து, அவர்களுக்குப் பிறக்கப்போகும் குழந்தைக்கு தேவையான பரிசைக் கொடுத்து அசத்தியிருக்கிறார்கள். இதோ நீங்களே இந்த வீடியோவைப் பாருங்களேன்.

Shares