jaffna7news

no 1 tamil news site

News

சிறுநீர் குடித்தே உயிர் வாழும் அதிசய நபர் : காரணத்தை கேட்டா ஆடிப்போய்டுவீங்க!!

தினமும் தனது சிறுநீரை குடித்து உயிர் வாழும் இளைஞர் பற்றி பலரும் ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளனர். இங்கிலாந்து நாட்டின், ஹாம்ப்ஷயர் பகுதியில் வசிப்பவர் ஹாரி மட்டாடின்(34).

இவர், கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் அவருடைய சிறுநீரை குடித்து வருகிறார். அதற்கு காரணமாக அவர் கூறியது மனநல ஆரோக்கியத்தை மேம்படுத்த இவ்வாறு செய்ததாக அவர் தெரிவித்தார்.

மேலும், சிறுநீர் குடிக்கும் போது அமைதி, சமாதானம் மற்றும் உறுதியடைகிறது. இதன் காரணமாக சொந்த சிறுநீரை குடிக்க பழகி விட்டதாக தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் அவர் தெரிவித்து இருக்கிறார்.

ஹாரி மட்டாடின் தினமும் 200 மில்லி லிட்டர் சிறுநீர் குடிப்பதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார். தினமும் ஒரு மாதம் பழைய சிறுநீர் அதன் மேல் சில துளி புது சிறுநீர் ஆகியவற்றை கலந்து குடித்து வருகிறார்.

பொதுவாக நாள்பட்ட பழைய சிறுநீர் அதிக வாடையை வெளியேற்றும். ஆனால் அதன் சுவை புதிதாக இருக்கும் என தெரிவித்து ஆச்சரியப்படுத்தி இருக்கிறார். சிறுநீரை குடிப்பது மட்டுமின்றி, அதை கையில் எடுத்து முகம் முழுக்க தடவி மசாஜ் செய்து மாய்ஸ்ச்சுரைசர் போன்றும் பயன்படுத்தி வருகிறார்.

விளைவுகள் என்ன?
இதுகுறித்து, பிரிட்டன் மருத்துவர் ஒருவர் தெரிவிக்கையில், சிறுநீர் குடிப்பது மிகவும் மோசமான செயல்.இப்படி செய்வதால் உடலில் இருக்கும் நீர்ச்சத்து மிக வேகமாக குறைந்து விடும். மேலும் இது உடலில் அதிகப்படியான கிருமிகளை உருவாக்கும் என கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares