நடிகர் ரகுவரனின் மகனா இவர்? அச்சு அசலாக தந்தையை போன்று இருக்கும் புகைப்படம்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம்வந்த நடிகர் ரகுவரன் மறைந்தாலும், அவரது மகன் அவரைப் போன்று அச்சுஅசலாக இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகின்றது.
நடிகர் ரகுவரன்

தமிழ் சினிமாவில் தனது தனித்துவமான நடிப்பினால் ரசிகர்களிடம் பிரபலமான நடிகர் ரகுவரன், நடிப்பிற்கு தேவையான அனைத்து நுணுக்கங்களையும் கற்றுக்கொண்டு தனக்கான வாய்பினை தேடி அலைந்தார்.

ஏழாம் மனிதன் படத்தில் நடித்து அசத்திய அவர், முதல் படத்திலேயே ரசிகர்களை கவர்ந்தார். ஆரம்பத்தில் சில படங்களில் கதாநாயகனாக நடித்த அவருக்கு, அடுத்தடுத்து வில்லன் கதாபாத்திரம் தான் கிடைத்தது.

வில்லன் என்றால் ஒரு தோற்றம் அனைவரது மனதில் இருந்த நிலையில், அதனை ஒட்டுமொத்தமாக உடைத்தவர் தான் நடிகர் ரகுவரன்.

சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் பல படங்களில் ஒன்றாக நடித்த நடிகர் ரகுவரன், ‘பாட்ஷா’ படத்தில் மார்க் ஆண்டனியாக நடித்து அனைவரையும் மிரட்டினார். இன்றளவிலும் அந்த கதாபாத்திரத்தை ரகுவரனை தவிர நிச்சயம் யாராலும் செய்ய முடியாது.

காதல் திருமணம்

நடிகர் ரகுவரன் நடிகை ரோகிணியை காதலித்து 1996ம் ஆண்டு திருமணம் சயெ்து கொண்ட நிலையில், இவர்களுக்கு 1998ம் ஆண்டு ரிஷிவரன் என்ற மகனும் பிறந்தார்.

2004ம் ஆண்டில் ஏற்பட்ட மன கஷ்டத்தினால் இருவரும் பிரிந்துவிட்ட நிலையில், மகனும் தாய் ரோஹினியுடன் சென்றுள்ளார். மகனின் பிரிவு ரகுவரனை அதிகமாகவே பாதித்தது.

இந்நிலையில் கடந்த 2008ம் ஆண்டு மாரடைப்பால் ரகுவரன் உயிரிழந்தார், இவரது இறப்பிற்கு காரணம் அதிகப்படியான குடிப்பழக்கம் என்று கூறப்பட்டாலும் உண்மையான காரணம் மகனைப் பிரிந்த மனஅழுத்தம் என்பது தெரியவந்துள்ளது.

சமீபத்தில் தந்தை மகன் பேரில் ஒரு ஆல்பம் ஒன்றை வெளியிட்டார். ஆரம்பகாலத்தில் இசையின் மீதுதான் ரகுவரன் அதிக காதல் கொண்டிருந்தார் ஆனால் காலத்தின் மாற்றத்தால் அவர் நடிப்பை தேர்வு செய்தார்.

தற்போது ரகுவரனின் மகன் தந்தையின் அந்த ஆசையை நிறைவேற்றி வருகிறார். தாய் ரோகிணியுடன் ரிஷி செய்யும் உடற்பயிற்சி வீடியோ மற்றும் தாயுடனான புகைப்படங்கள் இணையத்தில் உலா வருவதுடன், இதனை அவதானித்த ரசிகர்கள் அப்பாவைப் போன்று அச்சுஅசலாக இருப்பதாக கூறியுள்ளனர்.

Shares