தன் அப்பாவுக்கு அம்மாவாகவே மாறிய மகள்… இப்படியொரு மகள் இருந்தால் வாழ்வே சொர்க்கம் தான்…!

தந்தைக்கு தாயாக மாறிய மகள் வீடியோ ஓன்று இணையத்தில் வெளியாகி இணையவாசிகளின் பேராதரவை பெற்று தற்போது செம வைரலாக பரவி வருகிறது.

அப்பா_மகள் உறவின் மேன்மையை வார்த்தைகளால் விவரிக்கவே முடியாது. அதை உணர்ந்தவர்களுக்கு மட்டும் தான் தெரியும். அம்மாக்கள், மகன்களிடம் ரொம்ப பாசம் காட்டுவது போல், அப்பாக்கள் மகள்களிடம் கூடுதலாகவே பாசம் வைத்திருப்பார்கள்.

மகள்களின் திருமண காலத்தில் தந்தைகளின் உட்சபட்ச பாசம் வெளிப்படுவதைப் பார்க்க முடியும். ஆம்! நரம்பு தளர்ச்சியினால் பாதிக்கப்பட்டு நிரந்தர மாற்றுத்திறனாளி ஆகிவிட்டார் அப்பா ஒருவர்.

அவருக்கு காலையில் பல் துலக்குவதில் இருந்து, தொடர்ந்து சாப்பாடு கொடுப்பது, தவித்தபோது தண்ணீர் கொடுத்து அவரை படுக்க வைத்து பெட்சீட் போட்டு விடுவது என அத்தனையையும் இளம்பெண்ணான அவரது மகளே செய்கிறார்.

சாலையில் ஐஸ்க்ரீம் வண்டியைப் பார்த்ததும், தன் அப்பாவுக்கு ஐஸ்க்ரீமும் வாங்கி அவரே ஊட்டிவிடுகிறார். மகள்கள் அம்மாவாகிப் போகும் தருணத்தை வாழ்வில் தவறவேவிட முடியாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *