வெள்ளி பொருட்கள் பளபளக்க வைக்கணுமா? இதோ சிம்பிள் டிப்ஸ்

வெள்ளி என்பது பிரகாசமாக இருப்பதை விட பளபளப்பாக இருந்தால் தான் அழகே.

வெ‌ள்‌ளி‌ப் பா‌த்‌திர‌ங்க‌ள் ம‌ற்று‌ம் நகைகளை எ‌வ்வளவுதா‌ன் பாதுகா‌ப்பாக வை‌த்‌திரு‌ந்தாலு‌ம் ‌சில நேர‌ங்க‌ளி‌ல் அவை கறு‌ப்பாக மா‌றி ‌விடு‌கி‌ன்றன.

அதிலும் வெள்ளி பொருட்கள்,வெள்ளி கொலுசு கருப்பாக மாறிவிட்டால் நாம் அதை உபயோகிக்க தயங்குவோம்.

இந்த கருப்பாக அழுக்குகள் நிறைந்த வெள்ளி பொருட்களை வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு எப்படி ஈஸியா பளிச்சுனு செய்வது என்பதை பற்றி தெரிந்துகொள்ளலாம்.

வீட்டில் முளைவிட்டு இருக்கும் உருளைக்கிழங்கை சமையலுக்கு பயன்படுத்த முடியாது. அப்படி தேவையில்லாமல் இருக்கும் உருளைக்கிழங்கை துருவி எடுத்துக்கொள்ளுங்கள்.

பின் பாத்திரத்தில் 1/2 லிட்டர் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து அதனுடன் துருவிய உருளைக்கிழங்கு,1 தேக்கரண்டி எலுமிச்சைச்சாறு,1 தேக்கரண்டி உப்பு,1 தேக்கரண்டி டிடர்ஜென்ட் பவுடர் சேர்த்து நீர் சூடானதும் அதில் கருப்பாக இருக்கும் வெள்ளி பொருட்கள்,கொலுசு,வெள்ளி மோதிரம் போட்டு 15 நிமிடம் நன்றாக கொதிக்கவிடுங்கள்.

அந்த நீர் நன்றாக கொதித்ததும் அடுப்பை அனைத்துவிட்டு 10 நிமிடம் மூடி போட்டு வையுங்கள்.பின் குளிர்ந்த நீரில் ஒரு முறை கழுவி பழைய டூத் பிரஷை சோப்பில் நனைத்து ஒரு முறை தேய்த்தால் இடுக்குகளில் உள்ள அழுக்குகளும் வெளியேறி வெள்ளி பொருட்கள் புதியதுபோல் மின்னும்.