கமல் ஹாசனையே கதறவிட்ட ஜிபி முத்து.. முதல் நாளே இப்படியா

பிக் பாஸ் 6 போட்டியாளராக ஜிபி முத்து வீட்டுக்குள் நுழைந்திருக்கிறார். அவர் தான் இந்த சீஸனின் முதல் போட்டியாளர். அவரது அப்பாவித்தனத்தை பார்த்து கமல்ஹாசனே ஷாக் ஆகிவிட்டார்.

முதல் ஆளாக பிக் பாஸ் பிரம்மாண்ட வீட்டுக்குள் சென்ற அவர், அங்கு யாருமே இல்லையா என கொஞ்ச நேரத்தில் பயப்பட ஆரம்பித்துவிட்டார்.

அப்போது கமல் டிவியில் வந்து ‘இன்று இரவு முழுக்க நீங்கள் மட்டும் தான். தொழிநுட்ப கோளாறு காரணமாக வேறு யாரும் வரமாட்டாங்க’ என கூறி அவரை மேலும் பயமுறுத்தினார். அதை கேட்ட ஜிபி பயத்தின் உச்சிக்கே சென்று கெஞ்ச தொடங்கிவிட்டார்.

கமல்ஹாசன் ஆதாம் ஏவாள் பற்றி சொல்லி அவருக்கு அறிவுரை சொல்ல.. “ஆதாமா..” அப்படினா என பார்த்தார். கமல் அடுத்து என்ன சொல்வது என தெரியாமல் அமைதியாகிவிட்டார்.

கமல்ஹாசனையே ஜிபி முத்து ஷாக் ஆக வைத்திருக்கிறார் தலைவன் ஜிபி முத்து.

மற்ற பிக் பாஸ் போட்டியாளர்கள் உள்ளே வந்த பிறகு எல்லோரும் அவரை ‘தலைவா’ என்று தான் அழைத்து கொண்டிருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published.

Shares