வெங்காயத்தால் கருப்பு பூஞ்சை நோய் பரவுகிறதா? உண்மை என்ன?

குளிர்சாதன பெட்டிக்குள் பாதுகாக்கப்பட்ட வெங்காயம் சாப்பிடுவதால் கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு ஏற்படுவதாக பரவும் தகவல் உண்மை இல்லை என தெரிய வந்துள்ளது.

கொரோனா பெருந்தொற்றில் இருந்து மீண்டவர்களுக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு ஏற்பட்டு, பலர் மீண்டும் மருத்துவமனையை நாடி வருகின்றனர்.இந்த நிலையில், சமூக ஊடகங்களில் வெங்காயம் குறித்தும், குளிர்சாதன பெட்டிக்குள் பாதுகாக்கப்படும் காய்கறிகள் தொடர்பிலும் தகவல் ஒன்று பரவி பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது.

அதில், வெங்காயம் வாங்குவோர் கவனிக்க வேண்டும் எனவும், அந்த வெங்காயத்தில் கருப்பு நிறத்தில் பூஞ்சைகள் படிந்து காணப்பட்டால் அது உயிருக்கு ஆபத்தாக கூடும், தற்போது பரவும் கருப்பு பூஞ்சை நோய்க்கும் அதுவே காரணம் எனவும் அந்த தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் நிறுபணர்கள் தரப்பு அதை முற்றாக மறுத்துள்ளதுடன், கொரோனா நோயாளிகளில் பரவும் பூஞ்சை நோய்க்கும் வெங்காய பூஞ்சைக்கும் தொடர்பில்லை என சுட்டிக்காட்டியுள்ளனர்.வெங்காயத்தில் படிந்திருக்கும் கருப்பு பூஞ்சையானது அது விளையும் மண் தொடர்பிலானது எனவும், அதான் பாதிப்பு என்பது மிகஅரிதானது எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

இருப்பினும், வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளை நன்கு தண்ணீரில் அலசிய பின்னரே பயன்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.

Shares