மயக்க ஊசிக்கு பதில் ஆசிட்டை செலுத்திய மருத்துவர்! பிரபல நடிகையின் கோர தோற்றத்துக்கான அதிர்ச்சி காரணம்?

நடிகை சுவாதியின் முகம் கோர தோற்றத்துடன் காட்சியளிப்பதற்கான காரணம் தற்போது வெளியாகி பகீர் கிளப்பியுள்ளது.

பல் மருத்துவரின் தவறான சிகிச்சை காரணமாகவே இவ்வாறு நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.

கன்னட நடிகை ஸ்வாதி சதீஷ் ரூட் கேனல் அறுவை சிகிச்சைக்கு பிறகு உடல் ரீதியாக பெரும் பின்னடைவை சந்தித்துள்ளார்.

மயக்க ஊசிக்கு பதில் ஆசிட்டை செலுத்திய மருத்துவர்! பிரபல நடிகையின் கோர தோற்றத்துக்கான அதிர்ச்சி காரணம்?

இது ஒரு பொதுவான பக்க விளைவு என்றும் சில மணிநேரங்களில் வீக்கம் குறையும் என்றும் நடிகைக்கு அந்த நேரத்தில் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

இருப்பினும், 20 நாட்களுக்குப் பிறகும், ஸ்வாதி முகம் வீங்கியிருந்ததால் அதிர்ச்சியடைந்துள்ளார்.

பின்னர் ஸ்வாதியை பரிசோதித்த மருத்துவர்கள் பல் வேரை அகற்றினால் சரியாகிவிடும் எனக்கூறி அதற்காக சிகிச்சை அளித்துள்ளனர். இருந்தும் வீக்கம் குறையாத காரணத்தால் இது குறித்து விளக்கம் கேட்டபோது சரியான பதில் கிடைக்கவில்லை என சமூக வலைத்தளம் மூலம் தெரிவித்துள்ளார்.

மேலும் கிளினிக்கிற்கு எதிரான சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கவும் பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.
முகம் வீங்கியதற்கான காரணம் தெரியவந்துள்ளது.

மருத்துவ பரிசோதனையில் சுவாதிக்கு மயக்க ஊசிக்கு பதிலாக முகத்தில் உள்ள முகப் பருவை குணப்படுத்த பயன்படுத்தக் கூடிய சாலிசிலிக் ஆசிட்டை (Salicylic Acid) மருத்துவர் செலுத்தியுள்ளது தெரியவந்தது.

மயக்க ஊசிக்கு பதில் ஆசிட்டை செலுத்திய மருத்துவர்! பிரபல நடிகையின் கோர தோற்றத்துக்கான அதிர்ச்சி காரணம்?

இது தோலில் ஊடுருவி சென்று முகப் பருவை ஏற்படுத்தும் பாக்டீரியாவை அழிக்கும்.

அது போல் தோலில் அதிக எண்ணெய் உற்பத்தியை குறைக்கும்.

தோலில் உள்ள துளைகள் எப்போதும் திறந்திருக்க உதவும். இந்த நிலையில் அந்த மருத்துவர் மீது ஸ்வாதி புகார் அளிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.

Shares