பூநகரி – வலைப்பாடு கிராம மக்களுக்கு கடலட்டைப் பண்ணைகளை பகிர்ந்தளிப்பது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் கலந்துரையாடல்!

கடலட்டைப் பண்ணைகளை அமைப்பதற்காக விண்ணப்பித்துள்ள பூநகரி, வலைப்பாடு கிராம மக்களுக்கு கடலட்டைப் பண்ணைகளை பகிர்ந்தளிப்பது தொடர்பான கலந்துரையாடல் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் பூநகரி நக்டா தேசிய நீரியல் வள அபிவிருத்தி அதாகாரசபை அலுவலகத்தில் இன்றையதினம் இடம்பெற்றது.

இதேநேரம் பூநகரி, வலைப்பாடு கடற்றொழிலாளர்களுக்கான விண்ணப்பத்தின் அடிப்படையில், கடலட்டை பண்ணைகளை பகிர்ந்தளிப்பது தொடர்பான கலந்துரையாடலுக்காக சென்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சங்குப்பிட்டி பாலத்தின் ஓரத்தில் இறால் இறுவடை செய்யும் தொழிலாளர்களையும் சந்தித்து கலந்துரையாடியதுடன் அவர்களது பிரச்சினைகள் தொடர்பிலும் கேட்டறிந்தார்.

அத்துடன் பூநகரி, சங்குப்பிட்டி கடற்றொழிலாளர் இறங்குதுறைக்கான கண்காணிப்பு விஜயத்தினை மேற்கொண்ட கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக கேட்டறிந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.