சின்னத்திரை நடிகை சித்ரா தூ க் கு போட்டு த ற் கொ லை

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் நடிகை சித்ரா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

விஜய் தொலைக்காட்சியில் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடரில் ‘முல்லை’ என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் சித்ரா (29).

இவர் இன்று 09.12.20-ம் தேதி அதிகாலை 02.30 மணிக்கு, ஈ.பி.பி ஃபிலிம் சிட்டியில் நேற்றிரவு படபிடிப்பு முடித்துவிட்டு ஹோட்டல் ரூமிற்கு வந்துள்ளார்.

தனக்கு நிச்சயம் செய்த ஹேமநாத் என்பவருடன் சித்ரா ஒன்றாக தங்கியிருந்துள்ளார். இந்நிலையில், சித்ரா ஹேமநாத்திடம் தான் குளிக்கச் செல்வதாக கூறி ரூமிற்கு வெளியே செல்ல சொன்னதாகவும், வெகுநேரம் ஆனதால் அறையின் கதவை தட்டியதாகவும் ஹேமநாத் தெரிவித்துள்ளார்.

கதவை சித்ரா திறக்காததால் ஹோட்டல் ஊழியரிடம் சொல்லி மாற்று சாவியை எடுத்துவந்து திறந்து பார்த்தபோது சித்ரா அறையில் உள்ள மின்விசிறியில் புடவை மூலம் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.

சித்ரா சடலத்தை கைப்பற்றி நசரத் பேட்டை போலீஸார் விசாரணை. தொலைக்காட்சி தொகுப்பாளராக அறிமுகமாகி, பின்னர் சின்னத்திரை தொடர்களில் நடித்து வருகிறார் சித்ரா.