இந்த நீரை முடியில் தேய்த்தால் ஒரு முடிக்கு பக்கத்தில் பத்து முடி வந்துவிடும்

அனைத்து பெண்களுக்கும் இருக்கும் ஒரே ஆசை தலைமுடி நல்ல அடர்த்தியாகவும், மிகவும் நீளமாகவும் வளர வேண்டும் என்பது தான். அவ்வாறு ஆசைப்படுவது ஒன்றும் தவறு இல்லை.இருந்தாலும் தலைமுடி வளர வேண்டும் என்றால், முடியை நன்றாக பராமரிக்க வேண்டும்.எப்படி பராமரிப்பது என்றால்? முடியை நன்றாக வளர்க்க வேண்டும் என்றால் செயற்கை முறையை இன்றுடன் கைவிடவேண்டும்.

அவ்வாறு முடி உதிர்ந்து வழுக்கை ஏற்படாமல் இருக்க சிறிதளவில் வெந்தயத்தை நன்கு அரைத்து, அதை ஒரு கப் தண்ணீரில் கலந்து கொள்ள வேண்டும். இந்த கரைசலை தலை முடியில் நன்கு தடவி, 40 நிமிடங்களுக்கு ஊற வைத்து, பின் தண்ணீரில் முடியை அலசி விட வேண்டூம். இதை தொடர்ந்து மூன்று வாரம் செய்து வந்தால் முடி உதிர்தல் குறையும். உதிர்ந்த இடத்தில் மீண்டும் முடி வளர ஆரம்பிக்கும்.

மேலும் சோற்றுக் கற்றாழை சிறந்த பலன்களை தலைமுடிக்கு அளிக்கிறது. இதன் மூலம் இது முடியை மென்மையாக்கி, முடியின் வறட்சியை போக்கி முடி பளபளப்பாக்க வளரும்.

கருவேப்பிலை அரைத்து சிறிதளவு தலையில் தேய்த்து குளித்து வந்தால் முடி உதிர்வது குறையும். மேலும் உணவில் உள்ள கறிவேப்பிலையை சாப்பிட்டுவந்தால் தலை முடி உதிர்வதை தடுக்கலாம்.

கரிசலாங்கண்ணி, வெண்கரிசாலை அல்லது கையாந்தகரை என்றும் இதனை கூறுவார்கள். இது ஒரு மருத்துவ மூலிகைச் செடியாகும். கரிசலாங்கன்னியை அரைத்து ஒருமாதங்களுக்கு தலையில் தேய்த்து குளித்துவந்தால் தலைமுடி உதிர்வதை தடுக்கலாம். கரிசலாங்கண்ணி சாதாரண வயல் வரப்புகளில் வளரக்கூடிய செடியாகும். இதனால் தலைமுடியின் நிறம் கருமை நிறம் அடையும்.