இந்த ராசியில் பெண் வரன் வந்தால் உடனே ஒகே சொல்லிடுங்க… இவர்கள் சிறந்த மனைவியாக இருப்பார்கள்..!

திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்பார்கள். ஆனால் அந்த திருமண வாழ்வு எல்லாருக்கும் இனித்துவிடுவதில்லை. இப்போதும் சிலர் எங்கள் வீட்டில் எல்லாம் மதுரை மீனாட்சி ஆட்சிதான் என கேஸ்வலாக சொல்வதைக் கேட்டிருப்போம். அதன் அர்த்தம் வீட்டில் மனைவியின் கை ஓங்கியிருப்பதைக் குறிக்கும்.

அந்தவகையில் சில ராசியில் பிறந்த பெண்கள் சிறந்த மனைவியாக இருப்பார்கள். கணவர்களிடம் மிகவும் அன்பும், பண்புமாக நடந்து கொள்வார்கள். அது யாரெல்லாம் எனத் தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்

மிதுனம்.

இவர்களிடம் கனிவும், எளிதில் உணர்ச்சி வசப்படும் சுபாவமும் குடியிருக்கும். தங்கள் பாசத்துக்குரிய கணவரிடம் அதிக விஸ்வாசம் கொண்டு இருப்பார்கள். இவர்களுடன் வாழ்வதே சுவாரஸ்யமானதாக இருக்கும்.

மீனம்.

இவர்கள் இனிமையாகவும், அன்பாகவும் பழகக் கூடியவர்கள். மென்மையான வாழ்வியல் அணுகுமுறை இவர்களது இல்வாழ்க்கையை மகிழ்ச்சியாக்கும். அமைதி, நட்பை பெரிதும் இவர்கள் நேசிக்கிறார்கள். கணவனின் பிரச்னைகளில் இவர்கள் தோளோடு, தோல் கொடுத்து நிற்பார்கள்.

துலாம்.

இவர்களிடம் இயல்பாகவே காதலும், வேடிக்கைக் குணமும் இருக்கும். மனக்கிளர்ச்சியும், தன்னிச்சையாக இயங்கும் தன்மையும் இவர்களுக்கு உண்டு. இவர்கள் தங்கல் வாழ்க்கை இணையைக் கண்டுபிடிக்க அதிகநேரம் எடுத்துக் கொண்டாலும் அன்பால் நீடித்த வாழ்வை வாழ்வார்கள்.

கடகம்

கடகராசிக்காரர்கள் அரவணைப்புடன் இருப்பார்கள். இவர்களிடம் இயல்பாகவே தங்களுக்குக் கிடைத்த உறவை பாதுகாக்க வேண்டும் என்னும் பிடிப்பு இருக்கும். இதனால் குடும்பத்தை நன்கு பேணுவார்கள்.

சிம்மம்..

இவர்கள் நம்பிக்கையும், நேர்மையும் மிக்கவர்கள். கணவரின் அனைத்து முயற்சிகளுக்கும் உறுதுணையாக இருப்பார்கள். எப்போதுமே இவர்களின் தேர்வும் சிறப்பானதாக இருக்கும்.

அப்புறமென்ன நண்பர்களே இந்த ராசியில் பெண் வரன் வந்தால் மிஸ் செய்து விடாதீர்கள்.