சிவராத்திரியில் சிவலிங்கத்தை பூஜை செய்தால் கிடைக்கும் எதிர்பாராத பலன்கள் என்னென்ன?

சிவலிங்கத்தையோ, சாளக்ராமம், வில்வப்பழம் ஆகியவற்றை பஞ்சாயதன பூஜை இல்லாமலும், விதிகள் அறியாமலும் மனத்தூய்மையோடு உள்ளன்பு கொண்டு வழிபாடு செய்தாலும் நற்பலன்களை கொடுக்கிறது.

சிவலிங்கத்தை பூஜை செய்தால் அக்னிஹோத்தரமும் கோதானமும் செய்த பலனாது, அஸ்வமேத யாகம் ஆயிரம் செய்தாலும், ஒரு நாள் சிவலிங்கத்தை பூஜை செய்த பலனுக்கு ஈடாகாது.

சிவராத்திரி வேளையில் லிங்கோற்பவ காலத்தில் சிவலிங்கத்தை பூஜை செய்தால் பன்னிரெண்டு கோடி சிவலிங்கங்களை பன்னிரெண்டு கல்பகாலம் பூஜை செய்தபலன் ஒரே நாளில் கிடைக்கும்.

தீர்த்த யாத்திரையோ, யாகமோ செய்யாமலே சிவலிங்க பூஜையினால் முக்தியடைவான்.

சிவலிங்கத்தை அபிஷேகம் செய்த தீர்த்தத்தாலே சர்வ புண்ய தீர்த்தத்தில் ஸ்நானம் செய்த பலனும், சர்வ யக்ஞம் செய்த பலனும் கிடைத்துவிடும்.

பல புண்ணிய தீர்த்த தேவதைகள் சிவலிங்கத்தின் சூட்சுமாமயிருந்து அருள்பாலிக்கின்றனர். ருத்ர பாராயணம் செய்துகொண்டே சிவலிங்க பூஜை செய்பவன் சிவகதி அடைகிறான்.

சிவலிங்கம் இருக்குமிடத்தில் சமஸ்த லோகங்களும், சமஸ்த தேவதைகளும் இருப்பதாக ஐதீகம்.

சிவபெருமான் அபிஷேகப் பிரியர். பல ஆலயக் கருவறைகளில் சிவலிங்கத்தின் மீது எப்போதும் ஜலதாரை பொழியக் காணலாம்.

சந்தனம், புஷ்பம், தீபம், தூபம், நைவேத்தியம், வேள்விகள் செய்து இப்பூஜையினை செய்பவர்கள் சிவலோகத்தில் அனந்தகாலம் வாழ்வார்கள்.