‘இன்று மாலை 6 மணிக்கு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி முக்கிய செய்தி!

பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை 6 மணிக்கு நாட்டு மக்களிடையே உரையாற்ற உள்ளார்.

இதுகுறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டரில், இன்று மாலை 6 மணிக்கு நாட்டு மக்களுடன் ஒரு செய்தியை பகிர்ந்து கொள்ள உள்ளேன் என்று பதிவிட்டுள்ளார்.

நாட்டில் கொரோனா பரவல் மெல்ல குறைந்து வரும் நிலையில், கொரோனா தொற்று காரணமாக அமல்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகள் தற்போது பல்வேறு கட்டமாக தளர்த்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், மாலை 6 மணிக்கு மோடி எதை பற்றி செய்தியை வெளியிடுவார் என நாட்டு மக்கள் ஆவலுடனும் சற்று பதட்டத்துடனும் இருக்கின்றனர்.