துளிகூட கஷ்டம் இன்றி இயற்கை முறையில் இள நரையை போக்கலாம்..! இ தை செ ய்யு ங்கள்..!

முடி உதிர்தல் என்பது பலருக்கும் இருக்கும் மிகப் பெரிய பிரச்சனை.
ஆனால் இதைவிட பெரிய பிரச்சனை தான் இள நரை. இன்று இள நரைக்கான மருத்துவத்தை பார்க்கலாம்..! இதனை தொடர்ந்து செய்வதன் மூலம் இள நரையை முற்றிலும் தடை செய்யலாம்.! இதற்கு தேவையான பொருட்கள்: தேங்காய் எண்ணெய் 4 கரண்டி, காற்றாழை ஜெல் ஒரு கரண்டி, நெல்லிப் பொடி இரண்டு கரண்டி.

இவை உங்கள் தலையில் அளவை பொறுத்து அதிகரித்துக் கொள்ளுங்கள். முதலில் தேங்காய் எண்ணெய்யை சிறிய பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளுங்கள். பின்பு அதில் ஒரு கரண்டி கற்றாழை ஜெல் சேர்த்துக் கொள்ளுங்கள் அதனுடன் நெல்லிப் பொடி சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்யுங்கள்.

நெல்லிப் பொடியை நீங்கள் மருந்து கடைகளில் வாங்களாம். இந்த கலவையை தலை முடியின் வேர்கால்களில் இருந்து நுனி வரை பூசி நன்றாக மிக்ஸ் செய்யுங்கள். அரை மணி நேரம் அப்படியே விட்டு விடுங்கள். அதன் பின் தலையை லைட்டான சாம்பு போட்டு கழுவுங்கள். இப்படி வாரம் இரண்டு முறை செய்து வர தலைமுடி இயற்கையான கறுப்பு நிறத்தை பெற்றுவிடும்..!

நம் செய்திகள் பிடித்தால் , இங்கே உள்ள பேஸ்புக் பட்டனில் க்ளிக் செய்து உங்கள் நண்பர்களுக்கும் பகிரலாமே. உங்கள் ஆதரவை நமது இந்தச் சேவைக்கும் வழங்கலாமே!!