அரசியல் உரிமை அபிவிருத்தி அன்றாடப் பிரச்சினை அனைத்திற்கும் தீர்வு: அணி திரளுமாறு முல்லை மண்ணில் அமைச்சர் டக்ளஸ் அறைகூவல்!


தமிழ் மக்கள் எதிர்கொள்ளுகின்ற அரசியல் தீர்வு, அபிவிருத்தி, அன்றாடப் பிரச்சினை போன்ற அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வினைப் பெற்றுக் கொள்வதற்கு தன்னுடன் அணி திரளுமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அறைகூவல் விடுத்துள்ளார்

முல்லைத்தீவு மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் யாழ். மாவட்டத்தில் வீணை சின்னத்தின் 5 ஆம் இலக்கத்தில் போட்டியிடுகின்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று முல்லைத்தீவு நகரில் மக்கள் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொர்ந்தும் உரையாற்றுகையில்,

தமிழ் மக்கள் தன்மீது நம்பிக்கை வைத்து நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் வீணை சின்னத்தை வெற்றியயைச் செய்தால் மக்கள் எதிர்கொள்ளுகின்ற வேலைவாய்ப்பு பிரச்சினை, அபிவிருத்தி உட்பட அனைத்து பிரச்சினைகளுக்கும் ஒரு சில வருடங்களில் தீர்வினைப் பெற்றுத் தரமுடியும் எனவும் தெரிவித்தார்.

மேலும், மக்களின் வாழ்விடங்கள் மக்களுக்கே சொந்தமானவை என்பதை அனைத்து இடங்களிலும் வலியுறுத்தி வருவதாக தெரிவித்த அமைச்சர், தன்னுடைய கரங்கள் பலப்படுத்தப்படுமாயின்  கடல் வளம் உட்பட அனைத்து வளங்களுக்கும் பிரதேச மக்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படும் எனவும் வேறு பிரதேசத்தவர்கள் வந்து சுரண்டிச் செல்லப்படுவது தடுத்து நிறுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

SHARE

Related Posts

Previous
Next Post »