மீண்டும் மக்களை அழிவு நோக்கி இழுத்துச் செல்ல முடியாது : மல்லாவி மக்களுக்கு அமைச்சர் டக்ளஸ் நம்பிக்கையளிப்பு!


இருப்பதை பாதுகாத்துக் கொண்டு முன்நோக்கி நகர முடியும். மாறாக மீண்டும் அழிவு நோக்கி மக்களை இழுத்துச் செல்ல முடியாது என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் யாழ். மாவட்டத்தி்ல் வீணைச் சின்னத்தின் 5 ஆம் இலக்கத்தில் போட்டியிடுபவரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

மல்லாவி, பாலிநகர் செல்வபுரம் பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பிலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் –

கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆயுதப் போராட்டத்தின் ஆரம்ப காலப் போராளி என்ற நிலையில் ஏற்பட்டுள்ள அழிவுகளுக்கான தார்மீகக் பொறுப்பேற்று குறித்த அழிவுகளில் இருந்து மக்களை மீட்க வேண்டும் என்ற ஆதங்கத்தின் அடிப்படையிலேயே தற்போது அரசியலில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கடந்த கால மனோநிலையில் இருந்து வெளியே வந்து  மக்கள் சரியானவர்களை தெரிவு செய்ய வேண்டும எனத் தெரிவித்தார்.

மேலும், குறிப்பாக நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் வீணை சி்ன்னத்திற்கு வாக்களித்து தனது கரங்கள் பலப்படுத்தப்படுமாயின்  சிறந்த வாழ்வாதாரத்திற்கு தான் உறுதியளிப்பதாகவும் தெரிவித்தார்

SHARE

Related Posts

Previous
Next Post »