பிறந்த குழந்தையின் மலத்தை வைத்து அதன் ஆரோக்கியத்தை எப்படி அறியலாம் தெரியுமா?


பிறந்த குழந்தைகளின் மலக் கழிவை வைத்து அவர்களின் ஆரோக்கியத்தை பெற்றோர்கள் அறிய வேண்டும். தாய்மார்கள் குழந்தைகள் ஒரு நாளைக்கு எத்தனை முறை மலம் கழிக்கிறார்கள். அவர்களின் மலம் எப்படி இருக்கிறது என்பதை கவனிக்க வேண்டும்.


பிறந்த குழந்தை முதல் 4 வாரங்கள் வரை தினமும் 5 முதல் 6 முறை வரை மலம் கழிக்கும். இதனால் தாய்மார்கள் அச்சடைய வேண்டாம். செல்லகூடும் என்பதால் பயப்பட வேண்டியதில்லை.

குழந்தைகள் கழிக்கும் மலத்தின் நிறத்தை வைத்து ஆரோக்கியத்தை எப்படி அறிந்து கொள்ளலாம் என்று பார்ப்போம்

    குழந்தை பிறந்த உடன் முதல் முறையாக மலம் கழிக்கும் போது அடர்ந்த கருப்பு மற்றும் பச்சை நிறத்தில் வெளியேறுவது வழக்கம்.

    பனிக்குட நீரான அம்னியாடிக் திரவம், மியூகஸ், மெக்கோனியம் போன்றவை கலந்து மலமாக வெளியேறும். இவை மிகுந்த பிசுபிசுப்பு மற்றும் ஒட்டுதல் போன்று இருக்கும். இவை 2 முதல் 3 நாட்கள் வரை கூட வரும்.

    குழந்தை தாய்ப்பால் குடிக்க குடிக்க அவை சிறு குடலுக்கு சென்று தாய்ப்பாலில் இருக்கும் சத்துக்கள் உறிஞ்சப்பட்டு தேவையில்லாதவற்றை மலமாக வெளியேற்றும். இவை இலேசான துர்நாற்றம் இருக்கும். போக போக துர்நாற்றம் குறைந்துவிடும்.


    தாய்ப்பால் நன்றாக குடிக்கும் குழந்தைகள் மலம் கழிக்கும் போது மலம் பழுப்பு நிறத்தில் இருக்கும். அல்லது இலேசான மஞ்சள் நிறத்தில் இருக்கும். இவையே சற்று நீர்த்து காணப்பட்டால் குழந்தைக்கு வயிற்றுப்போக்கு இருப்பதை உணரலாம்.

    தாய்ப்பால் குடித்துகொண்டிருக்கும் குழந்தையின் உடலிலிருக்கும் அழுக்குகள் வெளியேறிய பிறகு குழந்தைகள் வெளிர் மஞ்சள் நிறத்தில் மலம் கழித்தால் குழந்தைகள் இயல்பாக இருக்கிறார்கள் என்று உணரலாம்.

    குழந்தைகள் மலம் அதிக இறுக்கத்தோடு இருந்தால் குழந்தையின் உடலில் அதிக நீர்ச்சத்து பற்றாக்குறை உள்ளதாக அறியலாம். குழந்தைகள் அதிகளவு தண்ணீர் தர வேண்டும். இல்லையென்றால் மலச்சிக்கல் ஏற்படும்.

    நீருடன் மலம் அதிகப்படியாக அடிக்கடிக்கு வெளியேறினால் குழந்தைக்கு வயிற்றுப்போக்கு உள்ளதாக அர்த்தம். இதனால் குழந்தை அழுது கொண்டே இருப்பார்கள். உடனே மருத்துவர்களிடம் கொண்டு செல்வது அவசியம்.

    குழந்தை மலம் சிவப்பு நிறத்தில் இருந்தால் உடனடியாக உங்கள் மார்பக காம்பை பரிசோதியுங்கள். அவை எந்த பாதிப்பும் இல்லாமல் இருந்தால் குழந்தையின் ஆசன வாயில் வெடிப்பு ஏதேனும் இருக்கிறதா என்று பாருங்கள். இரண்டுமே இல்லையென்றால் உடனடியாக மருத்துவரிடம் குழந்தையை கொண்டு செல்ல வேண்டும்.

    குழந்தைகள் வெள்ளை நிறத்தில் மலம் கழித்தால் இவை கல்லீரல் சிக்கலை குறிப்பதாகும்.

    பிறந்த குழந்தைக்கு மஞ்சள் காமாலை வருவது பொதுவானது. இதனால் 80% குழந்தைகள் பாதிக்கப்படுகிறார்கள். குழந்தை மஞ்சள் காமாலையிலிருந்து சரியாகிவிட்டதா என்பதை தாய்மார்கள் அறிந்துகொள்ள குழந்தையின் மலத்தின் நிறத்தை அறிய வேண்டும்.

    மிகவும் வெளிறிய அல்லது வெள்ளை நிறத்தில் மலம் இருந்தால் குழந்தையின் கல்லீரலில் சுரக்கவேண்டிய பொருள் ஒன்று சுரக்காதது பிரச்சனையாக இருப்பதாக அர்த்தம். உடனே மருத்துவரிடம் கொண்டு செல்ல வேண்டும்.

    சில குழந்தைகள் சாம்பல் நிறத்தில் மலம் கழித்தால் உடல் நல குறைபாட்டின் அறிகுறி. மருத்துவரிடம் குழந்தையை காண்பிப்பது நல்லது.


    குழந்தை பச்சை நிறத்தில் மலம் கழித்தால் நீங்கள் இரும்புச்சத்து சிரப், அல்லது மாத்திரை சாப்பிட்டிருந்தால் அப்படி வரலாம். தாய் பச்சை நிற உணவு கீரை வகைகள். பச்சை காய்கறிகள் போன்றவற்றை உண்டிருந்தால் குழந்தையின் மலம் பச்சை நிறத்தில் இருக்கும். இப்படி மலம் கழித்தால் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை.

    தாய்ப்பாலுக்கு மாற்றாக குழந்தைக்கு ஃபார்முலா பால் கொடுக்கும் போது குழந்தையின் மலத்தில் இலேசான கருப்பு, பச்சை மற்றும் மஞ்சள் நிறம் கலந்த மலம் வெளியேறினால் இயல்பானதுதான்.

    குழந்தை மலம் கழிக்கும் போது அவர்களது முகபாவங்களும் கவனிக்க வேண்டும்.

    குழந்தை பொதுவாகவே மலம் கழிக்கும் போது சிரமப்படுவார்கள். சில குழந்தைகள் அழுது மலத்தை வெளியேற்றுவார்கள். இவை அதிகமாகும் போது குழந்தைக்கு மலச்சிக்கல் உண்டாகியிருப்பதாக அறியலாம்.


    பொதுவாகவே குழந்தையின் மலம் அதிக இறுக்கமில்லாமல் அதிக தளர்வு இல்லாமல் இளகியத்தன்மையோடு இருக்க வேண்டும்.

    இனி உங்கள் குழந்தை மலம் கழிக்கும் போது அவர்களின் ஆரோக்கியத்தை தெரிந்துகொள்ளுங்கள்.

SHARE

Related Posts

Previous
Next Post »