முன்னோர்கள் தொப்பை வராமல் இருக்க இந்த அற்புத பானத்தை தான் குடித்தார்களாம்! அது என்ன தெரியுமா?

முந்தைய காலத்தில் நம் முன்னோர்கள் தொப்பையின்றி இருந்ததற்கு காரணம் ஆரோக்கியமான பழக்கங்கள் மற்றும் அதோடு அவர்கள் குடிக்கும் சில பானங்கள் காரணங்களாக இருந்தது என்று சொல்லப்படுகின்றது.

ஆனால் இன்றைய காலத்தில் பலரும் தொப்பை பிரச்சினையால் அவதிப்படுகின்றனர்.

அந்தவகையில் தொப்பை பிரச்சினையை தீரக்க கூடிய அந்த காலத்தில் நமது முன்னோர்கள் பயன்படுத்திய ஓர் அற்புத பானம் ஒன்றை எப்படி செய்யது என இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:

    சீரகம் - 1/2 டீஸ்பூன்
    மல்லி - 1/2 டீஸ்பூன்
    சோம்பு - 1/2 டீஸ்பூன்
    தண்ணீர் - 1 டம்ளர்
    எலுமிச்சை - 1/2
    தேன் - சுவைக்கேற்ப
    உப்பு - 1 சிட்டிகை

செய்முறை

முதலில் இரவு தூங்கும் முன் ஒரு டம்ளர் நீரில், 1/2 டீஸ்பூன் சீரகம், 1/2 டீஸ்பூன் மல்லி மற்றும் 1/2 டீஸ்பூன் சோம்பு சேர்த்து இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும்.

மறுநாள் காலையில், அந்த நீரை அடுப்பில் வைத்து கொதிக்க வைத்து, வடிகட்டிக் கொள்ள வேண்டும்.

பின் அத்துடன் ஒரு சிட்டிகை உப்பு, சுவைக்கேற்ப தேன் மற்றும் பாதி எலுமிச்சையின் சாற்றினை சேர்த்து கலந்து, குடிக்க வேண்டும். உங்களுக்கு அசிடிட்டி இருந்தால் எலுமிச்சை சேர்த்துக் கொள்வதைத் தவிர்க்கலாம்.
வேறு நன்மை

சீரகம்-சோம்பு-மல்லி நீரை ஒருவர் காலையில் எழுந்ததும், டீ, காபிக்கு பதிலாக குடித்து வந்தால், உடலின் ஆற்றல் மேம்படுவதோடு, நோயெதிர்ப்பு சக்தியும் வலிமையடையும்.

மேலும் காலையில் இந்த பானத்தை தினமும் குடிப்பதன் மூலம், உடலில் இருக்கும் நச்சுக்கள் அன்றாடம் வெளியேற்றப்படும். 

SHARE

Related Posts

Previous
Next Post »