ஆசையாக தாய் வீட்டுக்கு புறப்பட்ட இளம் காதல் ஜோடி!... ஆற்றில் மிதந்த சடலங்கள்- நடந்தது என்ன?


இந்தியாவில் திருமணம் முடிந்த இரண்டு மாதங்களுக்குள் இளம் ஜோடி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் குடும்பத்தினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகாவின் Hassan மாவட்டத்தை சேர்ந்த தம்பதி Krithika மற்றும் Arthesh. இவர்கள் இருவருக்கும் கடந்த மார்ச் மாதம் தான் திருமணம் நடைபெற்றுள்ளது.

பெங்களூரில் வேலை பார்த்து வந்த இவர்கள், இந்த ஊரடங்கு உத்தரவு காரணமாக சொந்த ஊருக்கு திரும்பியுள்ளனர்.

இந்நிலையில், Krithika-வின் தாயின் வீட்டிற்கு செல்வதற்காக இருவரும் இரு சக்கர வாகனத்தில் புறப்பட்டு சென்றுள்ளனர்.

ஆனால் அவர்கள் அங்கும் செல்லவில்லை, மாப்பிள்ளை வீட்டிற்கும் வரவில்லை. போனை தொடர்பு கொண்டும், ஸ்விட்ச் ஆப்பில் இருந்ததால், இது குறித்து காவல்நிலையத்தில் இருவரும் காணமல் போய்விட்டதாக புகார் கொடுக்கப்பட்டது.

இதையடுத்து பொலிசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், இவர்களின் உடல்கள் மீனவர்களால் ஹேமாவதி ஆற்றில் கண்டுபிடிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து அந்த சாலைப் பகுதியில் Arthesh-ன் இரு சக்கர வாகனம் இருந்தது. பொலிசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், பெண்ணின் வீட்டிற்கு சென்று கொண்டிருந்த போது, இங்கிருக்கும் டேம்மில் செல்பி எடுக்க முயற்சித்திருக்கலாம், அப்போது நிலைதடுமாறி கீழே ஆற்றில் விழுந்து இறந்திருக்கலாம் என்று சந்தேகிக்கின்றனர்.

ஏனெனில் இருவீட்டார் தொடர்பாக எந்த ஒரு பிரச்சனையும், இல்லை காவல்நிலையத்திலும் எந்த ஒரு புகாரும் இல்லை, இதனால் இது தற்கொலைக்கும் வாய்ப்பும் இல்லை, என்று பொலிசார் தெரிவித்துள்ளனர். இருப்பினும் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

SHARE

Related Posts

Previous
Next Post »