வவுனியா வர்த்தக நிலையங்களில் திருடப்பட்ட 200 000 பெறுமதியான பொருட்கள் மீட்பு : இரு பெண்கள் கைது!

இரு பெண்கள் கைது..

வவுனியா – மகாறம்பைக்குளத்தை சேர்ந்த பெண்கள் இருவர் பல வியாபார நிலையங்களில் திருட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர்.இவ்வாறு திருடப்பட்ட சுமார் இரண்டு இலட்சத்திற்கும் அதிகமான பொருட்களை பாடசாலை ஒன்றின் மலசலகூடத்திலும, ஸ்ரீராமபுரம் தாய் சேய் கட்டிடத்தினுள்ளும் பதுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் நிலையில் நேற்று மாலை அப்பொருட்கள் அனைத்தும் மகாறம்பைக்குளம் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

வியாபார முகாமையாளரால் வவுனியா பொலிஸாரிடம் கொடுக்கபட்ட சி.சி.ரி ஆதாரத்துடன் அப்பெண்கள் இருவரும கைது செய்யப்பட்டு பிணையில் உடனடியாகவே விடப்பட்டுள்ளார்கள். மேலதிக விசாரணைகள் மகாறம்பைக்குளம் பொலிஸாரால் மேற்கொள்ளபடுகின்றது.SHARE

Related Posts

Previous
Next Post »