ஆட்டுக்கறி நல்லதானு எப்படி பார்த்து வாங்க வேண்டும் தெரியுமா? எது ருசி.. கிடாயா? பெட்டையா?

அது தெரியாமலே நம்மில் பல பேரும் கடையில் போய் அவர்கள் கொடுப்பதை வாங்கிக் கொண்டு வந்து வீட்டில் நன்றாக வாங்கிக் கட்டிக் கொள்வார்கள்.

எப்படித்தான் மட்டனை நல்லதா பார்த்து வாங்கறது என்பது பற்றி இங்கு விளக்கமாகப் பார்க்கலாம்
தொடைக்கறி

பொதுவாக மட்டன் வாங்குகின்ற பொழுது, தொடைப் பகுதிகளில் சதை அதிகமாக இருக்கும் என்பதால் அந்த பகுதியைக் கேட்டு வாங்குவோம்.

ஆனால் தொடைப் பகுதியில் சதை அதிகமாக இருந்தாலும் சாப்பிடச் சற்று கடினமானதாக இருக்கும். பொதுவாக ஆடு நடக்கின்ற பொழுது, அதிகமாக அசைகின்ற தசைகள் கொஞ்சம் கடினமானதாக இருக்கும்.
நெஞ்சுப்பகுதி

அதனால் தான் எப்போதும் மட்டன் வாங்குகின்ற பொழுது நெஞ்சுப் பகுதி மற்றும் நெஞ்சுக்குப் பின்புறம் உள்ள முதுகுத் தசைப்பகுதியை வாங்க வேண்டும். அந்த பகுதியில் உள்ள தசைகள் மிகவும் மென்மையானதாக இருக்கும்.
ரத்தம் தேங்குதல்

ஆரோக்கியமான ஆடு என்பதை வெட்டி தொங்க விட்டிருக்கும் இறைச்சியில் தேங்கி வடிகின்ற ரத்தத்தை வைத்தே தெரிந்து கொள்ளலாம்.

நல்ல ஆரோக்கியமான ஆடாக இருந்தால் வெட்டப்படும்போது உடலில் ரத்தம் எங்கும் தங்காமல் வடிந்துவிடும். எங்கும் தேங்கியிருக்காது. இதுவே ஏதேனும் நோய்வாய்ப்பட்ட ஆடாக இருந்தால் ஆங்காங்கே சிறிது சிறிது ரத்தம் தேங்கியிருக்கும். இதுவே ஆடு இறந்து போனபின் அறுத்ததாக இருந்தால் ரத்தம் முழுவதும் அப்படியே உடலில் படிந்திருக்கும்.
எது ருசி கிடாயா? பெட்டையா?

ஒரே பருவத்தில் உள்ள இரண்டு ஆடுகள் வெட்டப்படுகிறது என்றால் அதில் நிச்சயம் பெட்டை ஆட்டின் கறியைத் தேர்ந்தெடுங்கள். அதுதான் ருசி அதிகமாக இருக்கும். கோழியிலும் வெடைக் கோழி தானே ருசி அதிகம்.

SHARE

Related Posts

Previous
Next Post »