கொரோனாவால் உயிரிழந்த மூன்றாவது நபரின் சடலமும் தகனம்!

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்த மருதானை பகுதியை சேர்ந்த 73 வயதுடைய நபரின் சடலம் கொட்டிகாவத்தை முல்லேரியாவிலுள்ள பொது மயானத்தில் தகனம் செய்யப்பட்டுள்ளது.

குறித்த சடலம் சற்று முன்னர் சடலம் தகனம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்லாமிய மரபின்படி அந்த மதத்தைச் சார்ந்தவரின் சடலம் எரியூட்டப்படுவதில்லை என்பதால் இஸ்லாமிய மக்கள் மத்தியில் பரவலாக விசனம் வெளியிடப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் தற்போது வரையில் கொரோனா தொற்றுக்கு 148 பேர் உள்ளான நிலையில் மூவர் உயிரிழந்துள்ளனர். 21 பேர் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

SHARE

Related Posts

Previous
Next Post »