தீபத்தால் ஜொலிக்கும் கார்த்திகை மாதம்… மேஷம் முதல் கடகம் வரை அதிர்ஷ்டம் எப்படி?


கார்த்திகை மாதம் முதல் நாள் அன்று சூரியன் துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசியில் சஞ்சரிப்பார். துலாம் ராசியில் தனது பலத்தினை முழுமையாக இழந்து நீசம் என்ற நிலையில் சஞ்சரித்து வந்த சூரியன், தான் முழுமையாக வலிமை பெற தனது பயணத்தைத் துவக்கும் காலமே கார்த்திகை மாதம். நம் உடம்பில் உள்ள நாடி,

நரம்புகள் எல்லாம் கார்த்திகை மாதத்தில்தான் சீராக இயங்கும் என்று சொல்வார்கள். இந்த காலத்தில் தியானத்தில் ஈடுபடுவோர்க்கு நிச்சயம் ஞானம் சித்தியாகும் என்பது அனுபவித்தவர்கள் கண்ட உண்மை. இந்த கார்த்திகை மாதத்தில் மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம் ராசிக்காரர்களுக்கு பலன்கள் எப்படி என்று பார்க்கலாம்.
மேஷம்

தனித்தன்மை கொண்ட மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் கிரகங்களின் சஞ்சாரத்தை பார்த்தால் எட்டாம் வீட்டில் சூரியன், ஒன்பதாம் வீட்டில் சனி, கேது, குரு, மூன்றாம் வீட்டில் ராகு, ஆறாம் வீட்டில் செவ்வாய் என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. இந்த முன்ஜாமீன் போடவேண்டாம். பணம் விசயத்தில் கவனமாக இருங்க. பணவரவு அற்புதமாக உள்ளது. திருமணம் கை கூடி வரும். தடைகள் நீங்கும். களத்திர தோஷம் இருப்பவர்களுக்கு பரிகாரம் செய்யும் காலம் தேடி வருகிறது. மாணவர்கள் நன்றாக படிக்கவும். கவனமாக படித்தால் மட்டுமே அதிக மதிப்பெண் வாங்க முடியும். எதிரிகள் தொல்லைகளில் இருந்து தப்பித்துக்கொள்ளுங்கள். மறைமுக தொந்தரவுகள் அதிகமாக இருக்கும். உயர்படிப்புக்காக நேரம் கூடி வந்துள்ளது நன்றாக படிக்கலாம் டிகிரி வாங்கலாம். முயற்சி செய்யுங்கள் நல்லதே நடக்கும். ஒன்பதாம் வீட்டில் குரு அமர்ந்து உங்க ராசியை பார்ப்பதால் நன்மைகள் நடக்கும் முயற்சி பலன் கொடுக்கும். நல்ல வேலைகள் கிடைக்கும். அரசு வேலைக்கு முயற்சி செய்யலாம். அரசு வேலை செய்பவர்களுக்கு டிரான்ஸ்பர் கிடைக்கும். புதிதாக தொழில் ஆரம்பிக்கலாம். கணவன் மனைவி உறவில் நெருக்கம் அதிகமாகும் அவ்வப்போது வாக்குவாதங்கள் வந்து போகும். அப்பாவின் உடல் நலனின் அக்கறை தேவை. வண்டி வாகனம் எதுவும் புதிதாக வாங்க வேண்டாம். அதற்கான நேரமில்லை. இந்த மாதம் ஒன்பதாம் இடம் வலுவடைந்து கிரகங்கள் அதில் சங்கமித்திருப்பதால் நிறைய பாக்கியங்கள் தேடி வரும். இந்த மாதம் நீங்க குருபகவானை வணங்க நன்மைகள் நடைபெறும்.
ரிஷபம்

சூரியன், சுக்கிரன் ஏழாம் வீட்டில் இருப்பதால் குடும்பத்தில் குதூகலமாக இருக்கும். உங்க ராசிக்கு சூரியன், சுக்கிரன் பார்வை கிடைக்கிறது. காதல் விசயங்களில் இருந்து கொஞ்சம் தள்ளியே இருங்க. அவசரப்பட்டு வாழ்க்கை துணையை தேர்வு செய்ய வேண்டாம். மாணவர்கள் கவனமாக படிக்கவும். கிரகங்கள் எட்டாம் வீட்டில் இணைகின்றன. சனி, கேது, கூடவே குரு என கிரகங்கள் சஞ்சரிப்பதால் பண விசயத்தில் கவனமாக இருக்கவும். குழந்தைகளை கண்டித்து கண்காணிப்பாக வளர்க்கவும். கூடா நட்பு கேடாய் முடியும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இருக்கிறதை விட்டுட்டு பறக்க ஆசைப்படாதீங்க. வேலையை விட வேண்டாம். புதிய வேலை மாற இது சரியான நேரமில்லை. நீங்க கவனமாக இருக்கவும். மாத மத்தியில் புதன் சுக்கிரன் எட்டாம் வீட்டிற்கு நகர்கின்றனர். அடுத்தவர்கள் பேச்சை கேட்டு இருக்கிற வேலையை விட வேண்டாம் காரணம் அஷ்டம குரு இன்னும் இரண்டு மாதத்திற்கு கஷ்டப்படுத்துவார். கிரகங்களின் நகர்வு வரை காத்திருங்கள் நல்லதே நடக்கும்.
மிதுனம்

புத்திநாதன் புதனை ராசி நாதனாகக் கொண்டவர்களே. சூரியன் ஆறாம் வீட்டில் இருக்கிறார். புதன் ஆறாம் வீட்டிற்கு நகர்கிறார். சனி, கேது, குரு ஏழாம் வீட்டில் சஞ்சரிக்கின்றனர். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்தவும், காதல் உங்களுக்கு ஒத்து வராது. காதல் வலையில் விழ வேண்டாம். படிப்பில் கவனம் செலுத்துங்கள். இல்லாவிட்டால் கஷ்டப்பட வேண்டியிருக்கும். உடல் நலத்தில கவனம் செலுத்துங்கள். சாதாரண புண் கூட உங்களை கஷ்டப்படுத்தி விடும். குருபகவானின் பார்வை உங்க ராசிக்கு கிடைக்கிறது. கணவன் மனைவி இடையே நெருக்கம் கூடும் காரணம் குரு சுக்கிரன் பார்வை உங்க ராசிக்கு கிடைக்கிறது. திருமணமான தம்பதியருக்கு புத்திரபாக்கியம் கிடைக்கும். புதிய பிரச்சினைகள் வந்தாலும் அதை சமாளித்து விடுவீர்கள். மாத கோள்களின் சஞ்சாரம் மனதிற்கு இதமளிக்கும். வேலையில் இடமாறுதல் வரும். நல்லதாகவும் நடக்கும். வீட்டிற்குத் தேவையான ஆடம்பர பொருட்கள் வாங்குவீர்கள். பள்ளி கொண்ட பெருமாளையும் வணங்க ராகுவினால் ஏற்படும் பாதிப்புகள் குறையும்.
கடகம்

சந்திரனை ராசி நாதனாகக் கொண்ட கடக ராசிக்காரர்களே… இந்த மாதம் கிரகங்கள் உங்க ராசிக்கு ஆறாம் வீட்டில் சனி, கேது குரு கூடியுள்ளன. ஐந்தாம் வீட்டில் சுக்கிரன், சூரியன், மூன்றாம் வீட்டில் உள்ள செவ்வாய் நான்காம் வீட்டிற்கு நகர்கிறார். படிப்பில் கவனம் செலுத்துங்க. உங்களுக்கு பிடிச்சதை படிங்க. அப்பதான் ஜெயிக்க முடியும். கணவன் மனைவி உறவில் கவனமாக இருங்க. பிறர் சொல்வதை கேட்டு தவறான பழக்கங்களில் ஈடுபட வேண்டாம். வேலையில் எந்த பிரச்சினையும் இல்லை உங்களுக்கு மாற்றமும் இல்லை. நிம்மதியாக இருக்கவும். குரு பார்வையால் நன்மைகள் நடைபெறும். திருமணமான தம்பதியினருக்கு புத்திரபாக்கியம் கிடைக்கும். படித்து விட்டு வேலைக்காக வெளிநாடு செய்வதற்கு முயற்சி பண்ணுங்க அடுத்த சில மாதங்களில் நடக்கும். அதே நேரத்தில் இங்கே இருக்கிற நல்ல வேலையை விட்டு விட்டு வெளிநாடு போக முயற்சி செய்ய வேண்டாம். சந்திரபகவான் ஆலயமான திருப்பதி ஏழுமலையான வணங்க பாதிப்புககள் குறைந்து நன்மைகள் நடக்கும்.

SHARE

Related Posts

Previous
Next Post »