தர்ஷன் மனு ச னே இல்லை… மீ ண் டும் மூக் கை நு ழை கும் மதுமிதா?


பிக் பாஸ் தர்ஷன் ஒரு மனுசனே இல்லை என்று நடிகை மதுமிதா கூறியுள்ளார்.அண்மையில் இடம்பெற்ற நேர்காணல் ஒன்றில் கருத்து வெளியிடும் போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

கவின் உட்பட யாரும் தன்னை நேரில் வந்தோ, போனில் தொடர்பு கொண்டோ பேச வில்லை. மேலும், பிக்பாஸ் வீட்டில் இருந்து நான் வெளியேறிய உடன் தர்ஷனின் காதலியான நடிகை சனம் ஷெட்டி அவர்கள் எனக்கு போன் செய்து பேசினார்கள்.

இவ்வளவு பிரச்சினை நடந்தும் தர்ஷன் உங்களுக்கு முதல் உதவி செய்ய கூட வரவில்லையா என்று கேட்டார். நீங்கள் சொல்வது எனக்கு ரொம்ப அதிர்ச்சியாக இருக்கிறது என்றும் கூறினார்.

மேலும்,தர்சன் வெளியே வந்ததும் உங்களை சந்தித்து மன்னிப்பு கேட்டே தீர வேண்டும். இல்லையென்றால் தர்ஷன் உண்மையான “மனுசனே இல்லை” என நடிகை சனம் ஷெட்டி மதுமிதாவுக்கு ஆறுதல் கூறினாராம்.

ஆனால், தற்போது வரை நடிகை சனம் ஷெட்டி கூறிய மாதிரி தர்ஷன் நடந்து கொள்ளவில்லை என்றும், சனம் ஷெட்டி சொன்னது போலவே உண்மையாக தர்ஷன் ‘மனுசனே இல்லை’ எனவும் மறைமுகமாக நடிகை மதுமிதா விமர்சித்து வருகிறார்.

SHARE

Related Posts

Previous
Next Post »