நள்ளிரவில் அடித்து, நொருக்கி கொளுத்தப்பட்ட வைத்தியரின் வீடு..!! யாழ் நகரில் பயங்கரம்..!யாழ். புகையிரத நிலையத்திற்கு அருகிலுள்ள வைத்தியர் ஒருவரது வீட்டிற்குள் நுழைந்த ரவுடிக் கும்பல் வீட்டை அடித்து நொருக்கி வீட்டின் முன்னால் இருந்த வாகனத்தையும் தீ வைத்து எரித்துவிட்டு தப்பிச் சென்றுள்ளது.

யாழ்ப்பாண புகையிரத நிலையத்திற்கு அருகில் உள்ள சித்த மருத்துவர் ஒருவரின் வீட்டிலேயே இச்சம்பவம் நேற்று (வியாழக்கிழமை) இரவு இடம்பெற்றுள்ளது.இது தொடர்பாக தெரிய வருவதாவதுஇ மேற்படி வீட்டுகாரர்கள் அவசர தேவையின் நிமித்தம் கொழும்பு சென்றுள்ள நிலையில் வீட்டில் யாருமில்லாததால் வீட்டிற்குள் நுழைந்த ரவுடிக் கும்பல் அடாவடியில் ஈடுபட்டுள்ளது.

இதன்போது, குறித்த குழுவினர் வீட்டின் கதவு, ஜன்னல், உட்பட வீட்டிலிருந்த பொருட்களை அடித்து நொருக்கி சேதப்படுத்தியுள்ளனர். இதனைத் தொடர்ந்து வீட்டின் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஹயஸ் ரக வாகனத்தையும் தீ வைத்து கொழுத்தியுள்ளனர்.

இதனால், வாகனம் பற்றி எரிவதை அவதானித்த அயல் வீட்டுகாரர்கள் சம்பவம் தொடர்பாக வீட்டு உரிமையாளர்களுக்கு தகவல் தெரிவித்ததோடு மாநகர சபையின் தீயணைப்பு பிரிவிற்கும் அறிவித்தனர்.இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த யாழ்.

மாநகர சபை தீயணைப்பு பிரிவினர் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். ஆனாலும், வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனம் முற்று முழுதாக எரிந்துள்ளது.இச்சம்பவம் தொடர்பாக யாழ்.பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

SHARE

Related Posts

Previous
Next Post »