என் அன்புக் குழந்தையே….‘என் அன்புக் குழந்தையே… உன்னை விட்டு நான் எங்கு நகருவேன் என் குழந்தையை கவனிப்பதை தவிர வேறு என்ன எனக்கு வேலை.ஏன் உன்னையே நீ ஏளனமாக கருதுகிறாய்..? 


நீ யாருக்கும் சளைத்தவர் அல்ல. அறிவிலும், திறமையிலும் சரி உனக்கான சாதூரியம் என்பது தனித்துவம் பெற்றது உனக்கே ஏன் உன் திறமை மேலே ஏன் உனக்கு நம்பிக்கை இல்லாமல் இருக்கின்றாய்.?உனக்கு புரிய வைப்பதற்காவே சில நிகழ்வுகளை நிகழ்த்துகிறேன்.


 பணத்தை வைத்து எடைப்போடும் சில பேரிடம் இருந்து உன்னை நான் அவர்களின் உண்மையான முகத்தை உனக்கு நான் சுட்டிக் காட்டி உள்ளேன்.

பணம் என்பது தாள் மட்டும் அது தான் உயர்வை தருகிறது என்று நினைப்பவர்களிடம் இருந்து நீ விலகியே இரு. ஏன்னெற்றால், அவர்களுக்கு உன் உயர்வை பார்த்து பொறாமை பட கூடியவர்கள் இருக்ககூடும், அதனால், நீ உன் சுற்று வட்டாரத்தை பார்த்தே வாழ பழகிக்கொள்.

உன் சூழ்நிலையில் பணம் இல்லாமல் நீ தவிக்காலாம் ஆனால் நிச்சியம் உன் கடன் பிரச்சினை அனைத்தும் முடியும் நேரத்தை நீ தொட்டுவிட்டாய். உன்னை ஒருபோதும் நிற்கதியாய் விட மாட்டேன். என் பிள்ளையின் நிம்மதியில் தான். என் மனநிறைவு அமைந்திருக்கின்றது….

🌺🌺ஓம் ஸ்ரீ சாய் ராம்..🌺🌺 ஓம் ஸ்ரீ சாய் ராம்🌺🌺 ஓம் ஸ்ரீ சாய் ராம்🌺🌺

SHARE

Related Posts

Previous
Next Post »