காலை உணவில் இஞ்சி சேர்க்கலாமா? அதிகம் சேர்த்தால் என்ன ஆகும் தெரியுமா? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க


காலை உணவு என்பது எல்லோருக்கும் மிகவும் அத்தியாவசியமான ஒன்றாகும்.

அப்படிப்பட்ட உணவு நமது உடல் நலத்திற்கு நன்மை விளைவிக்கக் கூடியதாக இருக்க வேண்டும்.

அந்த வகையில் பார்க்கையில் இஞ்சி ஒரு சிறந்த உணவாகும். ஆனால் புகழ் பெற்ற பழமொழியான "அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு" என்பது இதற்கும் பொருந்தும்.

மற்ற அனைத்து மூலிகை பொருட்களை போல இஞ்சி டீயும் சில பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.

அளவுக்கு அதிகமாக இஞ்சி டீயை பருகும் போது, வயிற்றுப் போக்கு, நெஞ்செரிச்சல், வாய் எரிச்சல் போன்ற பக்க விளைவுகளை சிலர் அனுபவிக்கக்கூடும்.

இஞ்சியை மாத்திரை வடிவில் எடுத்துக் கொண்டால், இந்த பக்க விளைவுகளில் சிலவற்றை போக்க அது உதவிடும்.
இப்போது இஞ்சி டீயை அளவுக்கு அதிகமாக பருகினால் ஏற்படும் பக்க விளைவுகளை தெரிந்து கொள்ளுங்கள்.

    இஞ்சி டீயில் ஆஸ்பிரின் அல்லது ஐபூப்ரோஃபெனில் உள்ளது போலவே வலி நீக்கி உள்ளது. மேலும் உயர் இரத்த அழுத்தத்திற்காக மருந்து எடுத்துக் கொள்பவர்கள் கண்டிப்பாக இஞ்சி டீயை பருக கூடாது. அது இரத்த அழுத்தத்தை குறைத்து, இதய படபடப்பை உண்டாக்கிவிடும்.
    ஹீமோகுளோபினை உரையச் செய்யும் இரத்தத்தின் பகுதிகளான இரத்தத்தட்டுக்களின் செயல்பாட்டில் இஞ்சி தலையிடும். அதனால் இரத்த ஒழுக்கு நோயான ஹீமோஃபிலியா எனப்படும் இரத்த கோளாறு நோய்கள் ஏற்படும்.
    இஞ்சி டீ குடிப்பதால் அமைதியற்ற மற்றும் தூக்கமற்ற நிலை உருவாகும்.
    அறுவை சிகிச்சைக்கு முன்பாக அல்லது நெடுங்காலமாக இஞ்சி டீயை பருகி வருபவர்களுக்கு அது ஆபத்தை விளைவிக்கும்.
    பித்தப்பைக் கற்களால் அவதிப்பட்டு வருபவர்கள் ஊட்டச்சத்து சம்பந்தப்பட்ட மருத்துவரிடம் கலந்தாலோசித்த பின்பு தான் இஞ்சியை எடுத்துக் கொள்ள வேண்டும்.

SHARE

Related Posts

Previous
Next Post »