முல்லைத்தீவில் இராணுவத்தினரின் வாகனத்துடன், மோட்டார்சைக்கிளொன்று மோதி விபத்துமுல்லைத்தீவு - கொக்காவில் பகுதியில் இராணுவத்தினரின் வாகனத்துடன், மோட்டார்சைக்கிளொன்று மோதி விபத்திற்கு இலக்காகியுள்ளது.

குறித்த விபத்து சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.

இந்த சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்து கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறான சந்தர்ப்பத்தில், குறித்த விபத்து தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கியும் குறிப்பிட்ட நேரத்திற்குள் ஸ்தலத்திற்கு பொலிஸார் வருகை தரவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

SHARE

Related Posts

Previous
Next Post »