நாட்டு மக்கள் இம்முறை ஏமாற மாட்டார்கள்- வாசுதேச நாணயக்கார
போலியாக வாக்குறுதிகளை நம்பி நாட்டு மக்கள் இம்முறை ஏமாற மாட்டார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேச நாணயக்கார தெரிவித்துள்ளார்.

அனைத்து இன மக்களும் எதிர்பார்க்கும் ஆட்சி மாற்றம் நிச்சயம் ஏற்படும் என்றும் அவர் கூறியுள்ளார்

அநுராதபுர நகரில் இன்று இடம் பெற்ற பொதுஜன பெரமுனவின் கன்னி கூட்டத்தில் கலந்துக் கொண்டபோதே அவர் இதனை கூறியுள்ளார்.

கொள்கையற்ற அரசியல் பிரச்சாரத்தையே ஐக்கிய தேசிய கட்சி தற்போது முன்னெடுத்து செல்வதாக கூறிய அவர் , சஜித் பிரேமதாஸவின் கருத்துக்கள் அனைத்தும் நகைச்சுவையாகவே காணப்படுகின்றதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அட்க்ஹ்துடன் எவ்வித கொள்கைகளும் இல்லாமலே 2015ம் ஆண்டு ஆட்சிமாற்றம் ஏற்பட்டதன் காரணமாகவே கடந்த ஐந்து வருட காலமாக நாடு பாரிய நெருக்கடிகளை சந்தித்ததாகவும் வாசுதேச நாணயக்கார தெரிவித்துள்ளார்.

எனவே ஐக்கிய தேசிய கட்சியிடம் தவறாக ஆட்சியதிகாரத்தை வழங்கிய மக்கள் இன்று தவறினை திருத்திக் கொண்டுள்ளதாக தெரிவித்த அவர், மீண்டும் ஐக்கிய தேசிய கட்சி ஆட்சியினை கைப்பற்றாது என்றும் கூறியுள்ளார்.

மேலும் நவம்பர் 16ம் திகதிக்கு பிறகு ஆளும் தரப்பின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவின் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாக்கப்படும் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேச நாணயக்கார இதன்போது தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

SHARE

Related Posts

Previous
Next Post »